7 Jan 2012

நீங்க டிரைவரா? அப்போ கண்டிப்பா உங்களுக்குத்தான்...!

  சாலை பாதுகாப்பு வார விழா கடந்த ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. காவல் துறையினர், விபத்தைக் குறைக்கவும், சாலை விதிகளை கடைபிடிக்கவும் பல இடங்களில் வாசக பேனர்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தியும் வருகின்றார்கள்.


இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு:
► இரு சக்கர வாகனம் இருவருக்காக மட்டுமே இருவருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது.
► உரிய சைகைகள் காட்டாமல் திரும்பக் கூடாது.
► பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது.
► முன் செல்லும் வாகனத்தை முந்தும் போது இடது பக்கமாக முந்துதல் கூடாது.
► மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► 50 கி.மி. வேகத்திற்கு குறைக்காமல் செல்லக்கூடாது.

► சாலை சந்திப்புகளில் வேகத்தை முறைக்காமல் செல்லக்கூடாது.
► மஞ்சள் கோட்டைத் தாண்டி வாகனத்தை ஓட்டக்கூடாது.
► வளைவுகளில் முன் செல்லும் வண்டியை முந்தக்கூடாது.
► வாகனங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடாது.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு:
► ஓட்டுனர்களுக்கு அருகில் பயணிகளை அமரச் செய்து ஓட்டக்கூடாது.
► மூணு நபர்களுக்கு மேல் ஆட்டோவில் பயணிகளை ஏற்றக்கூடாது.
► பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பைகள் வெளியே தொங்கிக் கொண்டு வருமாறு எடுத்துச் செல்லக்கூடாது.
► அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் அடித்துச் செல்லுதல் கூடாது.
► சீருடை பெயர் வில்லை அணியாமல் ஒட்டுதல் கூடாது.
► அனுமதி பெறாமல் விளம்பரப் பலகை மாட்டக்கூடாது.
► அதிக பிரகாசமுள்ள மஞ்சள் விளக்குகளை வாகனத்தின் முன்பாக பொருத்தக் கூடாது.
► புகை பிடித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டக் கூடாது.
► மது அருந்திய நிலையில் ஆட்டோ ஓட்டக் கூடாது.
► வாகனங்களை சரக்குகள் ஏற்றிச் செல்ல பயன்படுத்துதல் கூடாது.

சுற்றுலா வாகனங்கள் மற்றும் கார் ஓட்டுனர்களுக்கு:
► அனுமதிக்கப்பட்ட வேகமாகிய 65கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனத்தை ஓட்டக் கூடாது.
► சீருடை பெயர் வில்லையின்றி ஓட்டக்கூடாது.
► உரிய அனுமதிச் சீட்டின்றி வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► தகுதிச் சான்று இன்றி வாகனத்தை ஓட்டுதல் கூடாது.
► உபரி இருக்கைகள் அமைத்து வாகனத்தை ஓட்டக்கூடாது.
► நடைச் சீட்டு பராமரிக்காமல் இருத்தல் கூடாது.
► அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
► வாகனங்களில் சரக்குகள் ஏற்றிச் செல்ல பயன்படுத்தக் கூடாது.
► சட்ட விரோத செயல்களுக்கு வாகனத்தை பயன்படுத்தக் கூடாது.
மது அருந்திய நிலையில் வாகனத்தை ஓட்டக் கூடாது.

சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு:
► ஓவர் லோடு சரக்குகள் ஏற்றக் கூடாது.
► அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது.
► அதிகப்பிரகாசம் தரும் உபரி முகப்பு விளக்குகள் பொருத்தக் கூடாது.
► மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டக்கூடாது.
தூக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டக்கூடாது.
► கிளீனரிடம் வாகனத்தை ஓட்டச் செல்லக்கூடாது.
► அதிக உயரமான சரக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லக் கூடாது (தரையிலிருந்து 380 செ.மீ. க்கு மேல் இருக்ககூடாது).
► பர்மிட், இன்சூரன்ஸ், தகுதிச் சான்றிதழ்களை சரி பார்க்காமல் ஓட்டக் கூடாது.
► அனுமதிக்கு மேல் நபர்களை கேபினில் ஏற்றக்கூடாது.
► சரக்குகளின் மேல் அபாயமான முறையில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது.


பேருந்து ஓட்டுனர்களுக்கு:
► அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
► புட் போர்டுகளில் பயணிகளை அனுமதிக்க கூடாது.
► முன் இடது இருக்கைகளில் ஓட்டுனர் பார்வையை மறைக்கும்படி பயணிகளை அமர வைக்கக்கூடாது.
► கால அட்டவணை பேருந்தில் இல்லாமல் இருக்கக் கூடாது.
► முன்னால் இருக்கும் பயணிகளிடம் பேசிக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது.
► இசை நாடா ஒலி இருப்பின் அதில் கவனம் செலுத்திக் கொண்டே பேருந்தை ஓட்டக் கூடாது.
► சீருடை, பெயர் வில்லை அணியாமல் பேருந்தை ஓட்டக் கூடாது.
► புகைபிடித்துக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது.
மது அருந்திய நிலையில் பேருந்தை ஓட்டக் கூடாது.


பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்போம்! விபத்தைக் குறைப்போம்!!
THANKS: S.B. RAAJENDRAN
DISTRICT CHAIRPERSON ROAD SAFETY & TRAFFIC AWARENESS

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்