20 Jan 2012

திரைப்படங்களில் சாத்தியமான தொழில்நுட்பம் நம் கைகளில்!!! (+வீடியோ)

"Nike+ FuelBand" இதுவரை திரைப்படங்களில் மாத்திரம் சாத்தியமாகி இருந்த தொழில் நுட்பம் தற்போது அனைவரிற்கும் சாத்தியாமாகியுள்ளது.
ஆம், அப்பிள் நிறுவனமும் NYC நிறுவனமும் இணைந்து ஏற்கனவே ஐஃபோனில் தொழில்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தற்போது கைகளில் அணியும் ஒரு பட்டியை அறிமுகம் செய்துள்ளன.
இது ஐஃபோனுடன் புலூடூத் அல்லது wifi மூலம் இணைந்து செயற்படக்கூடியதாக உள்ளது. அதைவிட அப்பிள் கணணிகளுடனும் இலகுவாக இணைத்து செயற்படுத்த முடியும். LED திரையுடன் கைகளில் வளையப்பட்டி போன்று அணியக்கூடியதாக இருக்கின்றமை சிறப்பு.
நாம் ஒரு நாளில் செய்ய வேண்டிய வேலைகளை பதிந்துவைத்துக்கொண்டால்,
அடுத்த நாள் காலையில் எழும்போதே அது தனது கணிப்பை ஆரம்பித்துவிடும். நாம் செய்ய வேண்டியவற்றை நினைவூட்டுவதுடன், சரியான நேரத்திற்குள் செய்து முடிக்குபோது எம்மை உற்சாகப்படுத்தும் வசனங்களையும் திரையில் காட்டக்கூயதாக உள்ளது.
இதன் மூலம், ஒரு நண்பர் நம்முடன் இணைந்திருப்பது போன்ற உணர்வைப்பெறுவதுடன்; வேலைகளை மன அழுத்தமின்றி சரியாக செய்ய முடியும் என்று தயாரிப்பாலர்கள் தெரிவித்தனர்.
ஆரம்பவிலை 139 டொலர்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்