11 Sept 2012

கம்ப்யூட்டர் மூலம் கொசு விரட்டலாம்



 கொசுவை விரட்ட எத்தனையோ வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன கொசுவர்த்தி காயில்,கொசுவலை,இன்னும் நிறைய (எதுக்குமே அடங்க மாட்டேன் என்று பல கொசுக்கள் வரம் வாங்கி வந்திருக்கின்றன )இது கொஞ்சம் வித்தியாசமான கண்டுபிடிப்பு.

 பொதுவாக கொசுவை விரட்ட ரசாயனங்கள்(chemicals)கலந்த கொசு விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன,இவைகள் கொசுக்களை கொல்கின்றனவோ இல்லையோ நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றன.

 தொல்லை கொடுக்கும் கொசுவை விரட்ட கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் என ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவவதன் மூலம் உங்கள் Computer ஐ ஒரு கொசு விரட்டியாக பயன்படுத்தலாம்.

அது எப்படிங்க சாத்தியம்??

தும்பி அல்லது தட்டான்பூச்சி(dragon fly) என்று அழைக்கப்படும் பூச்சிகள் கொசுக்களுக்கு பரம எதிரிகள்.ஆனால் கொசுக்கள் இவற்றின் வரவை உணர்ந்து இவைகளிடம் இருந்து தப்பித்து செல்வது விஞ்ஞானிகளின் மூளையில் ஆச்சரியக்குறி கலந்த கேள்விக்குறியாக உதித்தது.


அவர்கள் செய்த ஆராய்ச்சி தும்பிகள்(dragon flies) பறக்கும் போது அவற்றின் உருவ அமைப்பிற்கு தகுந்த மாதிரி குறிப்பிட்ட அலைநீளத்தில் (தோராயமாக 45 மற்றும் 67 Hzக்கு இடைப்பட்டசத்தம் எழுப்புகின்றன,இந்த சத்தத்தை உணர்ந்து தான் கொசுக்கள் தும்பிகளிடமிருந்து தப்பித்து செல்கின்றன என்ற முடிவுடன் முடிவானது.

நீங்கள் தரவிறக்கம் செய்யப் போகும் இந்த மென்பொருள் நீங்கள் தருகிற அலைநீளத்தில் ஒலியை உருவாக்கி தருகிறது.(56Hz என்பது கொசுவிரட்ட போதுமான சராசரி சத்தம்)இந்த சத்தத்தை ஒலிக்க செய்வதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும்!

உங்கள் Computer ஐ ஒரு கொசு விரட்டியாக பயன்படுத்த
நீங்கள் செய்ய் வேண்டியது என்ன?

டோன் ஜெனரேட்டர் என்று அழைக்கப்படுகிற சாப்ட்வேரை உங்கள் கணிப்பொறியில் install செய்து கொள்ளவும்.

பின் அதன் மூலம் 57 Hz அளவில் ஒலியை உருவாக்கவும்.

கணினியின் உதவியால் அதை ஒலிக்க செய்யவும்.


குறிப்பு:

1.உங்கள் கணினியில் Pc sound card மற்றும் Speakersஇருக்க வேண்டும்.(இல்லையென்றால் நீங்கள் உங்கள் கனினி மூலம் உருவாக்கிய அந்த ஒலியை கணினி உதவியின்றி வேறு முறையில் ஒலிக்கச் செய்யலாம்)

2.சத்தம் காதுக்கு கேட்கும் அளவில் சரிசெய்து கொள்ளவும்.

3.நீங்கள் இந்த சாப்ட்வேர் தவிர வேறு சில டோன் ஜெனெரெடர் களையும் (tone generator software)பயன்படுத்தலாம்.

கொசு விரட்டியாக பயன்படுத்தப் போகும் சாப்ட்வேர் கிடைக்கும் முகவரிகள்:


இந்த சாப்ட்வேர் பற்றி அறிந்து கொள்ள:

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்