30 Sept 2012

சரி, இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது?





மேலே உள்ள படத்தில் நடுவில் இருக்கும் சிவப்பு புள்ளியை முப்பது நொடிகள்
பாருங்கள். அதன் பின் அதற்கு கீழே இருக்கும் வெள்ளை பகுதியை பாருங்கள். அந்த நெகடிவ் படத்தின் உண்மையான படம் தெரிகின்றதா?

இதுவும் ஒரு வகையான மாயத் தோற்றம் (Illusion) ஆகும். இது போல படங்களை இணையதளங்களில் பார்த்திருப்பீர்கள். இதனை நாமே செய்வது எப்படி? கீழே உள்ள
குறிப்பை பாருங்கள்.


1. MS Paint-ஐ கணினியில் திறந்துக் கொள்ளுங்கள்.

2. அதில் மாற்றப் போகும் படத்தை திறந்துக் கொள்ளுங்கள்.

3. Select All செய்துக் கொள்ளுங்கள். ("Cntrl + A" அழுத்தியும் செய்துக் கொள்ளலாம்)

4. படத்தின் மீது Right Click செய்யுங்கள்.

5. "Invert Colour" என்பதை கிளிக் செய்யுங்கள்.

6. படத்தில் இருக்கும் உருவத்தின் மூக்கில் சிவப்பு கலரிலோ அல்லது பளிச்சென்று தெரியும்விதமாக வேறு நிறத்திலோ புள்ளி ஒன்றை வரைந்துக் கொள்ளுங்கள்.

7. பிறகு Save செய்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்! உங்களுக்கு மாயப் படம் தயாராகிவிடும். நண்பர்களுடன் அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Update:

இது  எப்படி வேலை செய்கிறது? என்ற அறிவியல் நுட்பத்தை பார்போம்...


சரி, இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது?



நீங்கள் கண்ட தோற்ற மயக்கம் ஒரு ஒளியியற்கண்மாயம் (Optical Illusion)  ஆகும்.  இதற்கு 'எதிர்மறை பின் தோற்றம்' (Negative After Image) என்று பெயர்.


கண்களில் உள்ள ஒளி உணர்விகளின் (Photoreceptors) துணைக் கொண்டே வண்ணங்களின் கலவையான உலகினை நம் கண்கள் காட்டுகிறன (இவற்றைப் பற்றி பிறிதொரு நாள் பேசுவோம்.) 


மேற்கண்ட படத்தைப் பார்த்த போது என்ன செய்தோம்? தொடர்ந்து ஒரே நிறத்தின் மீது கவனம் செலுத்தினோம் !!

ஒரே நிறத்தை  (அலை நீளத்தை) அதிக நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தால், கூடுதல் வெளிப்பாடு (Exposure) காரணமாக, குறிப்பிட்ட ஒளி உணர்விகள் சிறிது நேரம் தங்கள் உணர்திறனை (Sensitivity) இழந்து விடும். 
உடனடியாக வெற்றிடத்தைப் பார்க்கும் போது, தங்கள் செயல் திறனை (தற்காலிகமாக) இழந்தஉணர்விகள் மிகவும் மங்கி செயல்படுகிறன. பிற உணர்விகள் வழக்கம் போல செயல்படுகிறன.
 பிற உணர்விகளின் உணர்திறன் அதிகமாகத் தெரிவதால், மூளை அவற்றைக் கொண்ட உருவத்தை நமக்குக் காட்டுகிறது. நாம் முன்பு பார்த்த படம் நேர்மாறான நிறங்களுடன் (inverted Colours) நமக்குத் தெரிகிறது.

தெரிந்த படம் இது தானே?


இன்னொரு விளையாட்டு:

இந்த கருப்பு பல்பை 20 - 30 வினாடிகள் உற்றுப் பாருங்க.. அப்புறமா, சுவற்றைப் பாருங்க!



என்ன? சுவற்றில் பல்பு எரியுதா?

கொசுறு:
என்ன ஆனாலும், நம்ம மூளை ரொம்ப கில்லாடி.. 'ஏதோ பிரச்சனை' என்று சில நுண்நொடிகளில் (Micro Second) கண்டறிந்து, சரி செய்து விடுகிறது... (இல்லையெனில், ஆயுள் முழுக்க அந்த செல் (Cell) அவுட் ஆக வேண்டியது!! )





பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்