20 Sept 2012

Google Chrome - Internet Browser Software 23.0.1270.0


வேகமான மற்றும் இலவசமான வலை உலாவி மென்பொருளான Google Chrome வலைப் பக்கங்களையும், பயன்பாடுகளையும் மிக விரைவாக இயக்குகிறது. இது முற்றிலும் இலவசம், சில நொடிகளில் நிறுவலாம்
Windows XP, Vista, மற்றும் 7 ஏற்றதாக உள்ளது. வேகமான தொடக்கத்தை கொண்டுள்ளது. Google Chrome மிக விரைவாக தொடங்குகிறது. வேகமாக ஏற்றுகிறது. Google Chrome வலைப் பக்கங்களை விரைவாக ஏற்றுகிறது. வேகமான தேடல் வசதியினை கொண்டுள்ளது. முகவரிப் பட்டியிலிருந்தே வலையில் தேடலாம்.





அம்சங்கள்

Google Chrome என்பது, வலையை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் எளிதாக அணுகுவதற்கு உதவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குறைந்தபட்ச வடிவமைப்பையும் ஒருங்கே கொண்டுள்ள ஓர் உலாவியாகும். 
  • அனைத்திற்கும் ஒரே பெட்டி

    முழுமையான ஒரே பெட்டி, உங்கள் உலாவல் தேவைகளான வலைத் தேடல், வலை வரலாறு, முகவரிப் பட்டி, தட்டச்சு செய்யும்போது வரும் பரிந்துரைகள் போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்கிறது. 
  • புதிய தாவல் பக்கம்

    புதிய தாவலைத் திறக்கும் ஒவ்வொரு முறையும், அதிகம் பார்வையிட்ட தளங்கள், அதிகம் பயன்படுத்திய தேடுபொறிகள் மற்றும் சமீபத்தில் புக்மார்க் செய்யப்பட்ட பக்கங்கள் மற்றும் மூடிய தாவல்கள் ஆகியவற்றின் காட்சி மாதிரிகளைக் காண்பீர்கள். 
  • பயன்பாட்டு குறுக்குவழிகள்

    உலாவியைத் திறக்காமலே வலை பயன்பாடுகளைப் பயன்படுத்துங்கள். பயன்பாட்டு குறுக்குவழிகள், உங்களுக்குப் பிடித்த ஆன்லைன் பயன்பாடுகளை நேரடியாக நினைவேற்றும்.
  • டைனமிக் தாவல்கள்

    உலாவியிலிருந்து தாவல்களை வெளியே இழுத்து புதிய சாளரங்களை உருவாக்கலாம், பல சாளரங்களை ஒரே சாளரமாக்கலாம் அல்லது விரும்பும் வகையில் ஒழுங்கமைக்கலாம் – இதனை விரைவாகவும் எளிதாகவும் செய்ய முடியும்.
  • செயலிழப்புக் கட்டுப்பாடு

    நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு தாவலும், உலாவியில் தனிப்பட்ட முறையில் இயங்குகின்றன, ஆகவே ஒரு பயன்பாடு செயலிழந்தால் அது மற்ற பயன்பாடுகளை பாதிக்காது. 
  • மறைநிலை பயன்முறை

    நீங்கள் பார்வையிட்ட பக்கங்கள், வலை வரலாற்றில் காண்பிக்கப்பட வேண்டாமா? தனிப்பட்ட உலாவலுக்கு மறைநிலை பயன்முறையைத் தேர்வுசெய்க.
  • பாதுகாப்பான உலாவல்

    ஃபிஷிங், தீம்பொருள் என்று சந்தேகிக்கப்படும் அல்லது பாதுகாப்பற்ற பிற வலைத்தளங்களைப் பார்வையிட செல்லும்போது Google Chrome உங்களை எச்சரிக்கும். 
  • உடனடி புக்மார்க்ஸ்

    ஒரு வலைப்பக்கத்தை புக்மார்க் செய்ய வேண்டுமா? முகவரிப்பட்டியின் இடது ஓரத்தில் உள்ள நட்சத்திர ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் இதை செய்துவிடலாம். 
  • அமைப்புகளை இறக்குமதி செய்தல்

    Google Chrome க்கு மாறும்போது, நீங்கள் முன்பு பயன்படுத்திய உலாவியிலிருந்து நீங்கள் பயன்படுத்தி வந்த புக்மார்க்ஸ், கடவுச்சொற்கள் போன்ற அனைத்தையும் எடுத்துக்கொள்ள முடியும். 
  • எளிமையான பதிவிறக்கங்கள்

    தேவையில்லாமல் குறுக்கிடும் பதிவிறக்க நிர்வாகி இல்லை; பதிவிறக்கத்தின் நிலையை நடப்பு சாளரத்தின் கீழ்ப்பகுதியில் பார்த்துக்கொள்ளலாம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்