16 Sept 2012

கணனியில் மேற்கொள்ளப்​பட்ட USER ACCOUNTS தகவல்களை பெறுவதற்கு

கணனி ஒன்றில் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளின் உதவியுடன் உள்நுழைவுகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உள்நுழைந்தவர்களை உள்நுழைவுக் கணக்குகளின் அடிப்படையில் கண்டறிவதற்கு இலகுவான வழிமுறை ஒன்று உள்ளது.


இதனைச் செயற்படுத்துவதற்கு முதலில் விண்டோஸ் விசையினை அழுத்தி gpedit.msc என டைப் செய்து அதனை ஓப்பின் செய்யவும்.
தோன்றும் விண்டோவில் Local Computer Policy –> Computer Configuration –> Windows Settings –> Security Settings –> Local Policies –> Audit Policy என்ற படிமுறையினூடாகச் சென்று Audit logon events என்பதை டபுள் கிளிக் செய்யவும்.
தொடர்ந்து தோன்றும் விண்டோவில் Success, Failure ஆகிய checkbox களில் அடையாளம் இட்டு OK செய்யவும். இப்போது கணனியில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான உள்நுழைவுகள், தோல்வியில் முடிந்த உள்நுளைவுகள் தொடர்பான தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.


இத்தகவல்களை பார்ப்பதற்கு விண்டோஸ் விசையினை அழுத்தி Event Viewer என டைப் செய்து கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் உள்ள Windows Logs –> Security என்பதை கிளிக் செய்தால் போதும் அனைத்து விதமான உள்நுழைவுத் தகவல்களும் தனித்தனியாக காண்பிக்கப்படும்.
இவற்றினை விரிவாகக் காண்பதற்கு குறித்த ஒரு உள்நுழைவுத் தகவலின் மீது டபுள் கிளிக் செய்தால் தனியான விண்டோவில் முழுத்தகவல்களையும் பெறமுடியும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்