27 Nov 2013

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு WiFi மூலமாக பகிர்வது எப்படி?


நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் 
உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.

Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device  தனியாக போட்டிருக்கவேண்டும்



சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.

2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்

Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்.


3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

கணினி மெதுவாக இயங்க காரணகளும், அதற்கான‌ தீர்வுகளும்.


கணிணி வாங்கிய‌ புதியதில் வேக மாக இயங்கிய நம் கணினி சில மாதங்களி ல் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக் காதது தான் மிக முக்கியமான காரண ம். 
இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவி ல் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணங்கள்:
1. மிகக் குறைந்த Hard Disk Space
  1. 2. நிறையProgram-கள் இயங்கிக்கொண்டு இருப்பது.
  2. 3. Data Corruption
  3. 4. அதிக சூடாகுதல்
  4. 5. Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
  5. 6. Hardware Problems
  6. 7. Driver பிரச்சினை

இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.
Reboot :

உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

Hard Disk Space
இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் 


மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.
Hard drive corrupted or fragmented
இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம்கவனிக்க வேண்டும்.

Run Scan Disk – இது Hard Disk – இல் ஏதே னும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check
இதில் Start என்பதை கிளிக் செய்யவும்.
 Scan ஆரம்பித்து விடும்.

அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs
சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக் ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக் கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். 

CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப் பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.

கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக 
இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.
Virus பிரச்சினைகள்
இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்
உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் 




மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.
இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்
இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் 

கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart 
செய் யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். 

இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்
மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சி னையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். 

இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல்
உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம்மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). 

புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.

Registry Cleaner பயன்படுத்துதல்
பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.



Operation System இன்ஸ்டால் செய்தல்

மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள்

மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.

13 Nov 2013

அல்தாபி மற்றும் பீஜே அவர்களின் RING TONE


நாம் நமது மொபைல் போன்களில் யாரிடமாவது இருந்து அழைப்பு வரும் பொழுது எதாவது இசையை தான் ரிங்டோன்-நாக வைத்திருப்போம் அதை தவிர்த்துவிட்டு விட்டு இதுபோன்ற ரிங்டோன்-நை வைக்காலாமே....!

                                          CLICK HERE TO DOWNLOAD

20 Sept 2013

நீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்





ஸ்கை ட்ரைவ், இப்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மையப் பகுதியாக, அதிலிருந்து நீக்க முடியாத பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை சேவ் செய்திட, ஸ்கை ட்ரைவ் புரோகிராமினை உருவாக்கியது. 

நமக்குத் தேவை எனில், இதில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், நம் பைல்களை இதில் சேமித்து வைக்கலாம். எங்கு சென்றாலும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும், நம் பைல்களைப் பெற்று, எடிட் செய்திடலாம். இந்த வசதி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இதனைத் தன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிப் பயன்படுத்துகின்றனர் என்பதனை அறிந்த மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் சிஸ்டத்தின் நீக்க முடியாத ஒரு பகுதியாக ஸ்கை ட்ரைவினை ஏற்படுத்தியுள்ளது.

விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நீங்கள் ஸ்கை ட்ரைவ் புரோகிராம் பயன்படுத்த தனியே ஒரு டெஸ்க்டாப் க்ளையண்ட்டை அமைக்க வேண்டியதில்லை; அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மேற்கொண்டது போல, விண்டோஸ் ஸ்டோரிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் தரவிறக்கம் செய்து இயக்க வேண்டியதில்லை. 

இது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டு அனுபவத்தின் மையப் பகுதியாகவே இது இயங்குகிறது. இத்தகைய இணைப்பு நமக்குச் சொல்வது என்ன? இது போன்று அமைக்கப்பட்டிருப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், ஸ்கை ட்ரைவ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதனை, நாம் விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்திடுகையிலேயே உணரலாம். 

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நம் தனி விருப்பங்களைஅமைக்கையிலேயே, “SkyDrive is your cloud storage” என்ற செய்தி நமக்குத் தரப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கு ஸ்கை ட்ரைவ் தேவையா என்றெல்லாம் கேட்கப்படுவதில்லை. 

ஸ்கைட்ரைவ் புரோகிராம் சிஸ்டத்தில் உள்ளது. உங்களுக்குத் தேவை இல்லை என்றால், அதன் இயக்கத்தின் மாறா நிலைகளை மாற்றி அமைக்கலாம். ஆனால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து அதனை அழிக்க முடியாது. அதன் இயக்கத்தினை நிறுத்த முடியாது.

முதலாவதாக, ஸ்டார்ட் ஸ்கிரீனிலேயே, ஸ்கைட்ரைவிற்கான டைலைக் காணலாம். இதனைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை எனில், அதற்கான டைலை மறைத்து வைக்கலாம். 

அடுத்து பைல் எக்ஸ்புளோரரில் ஸ்கை ட்ரைவ் பிரிவு கிடைக்கும். இதனை நீங்கள் மறைத்து வைக்க முடியும். நீங்கள் இதனைப் பார்க்கவோ, அல்லது பயன்படுத்தவோ விரும்பவில்லை என்றால், நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் டிற்குப் பதிலாக, லோக்கல் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தலாம். 

நீங்கள் யூசர் போல்டருக்குச் சென்றால், (“C:\Users\Your User Name”) அங்கே, மாறா நிலையில் யூசர் போல்டர்களில் ஒன்றாக, Sky Driveஅமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். ஆனால், லோக்கல் யூசர் அக்கவுண்ட் பயன்படுத்துகையில், ஸ்கை ட்ரைவ் போல்டர் கிடைக்காது. 

இவற்றுடன், ஸ்கை ட்ரைவ் பெர்சனல் கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் அமைப்பில், தனக்கென ஒரு பிரிவினைக் கொண்டிருப்பதனைக் காணலாம். எனவே, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலிருந்து, ஸ்கை ட்ரைவினை நீக்க முடியாது. இதனை அன் இன்ஸ்டால் செய்திடவும் முடியாது. 

அன் இன்ஸ்டால் ஆப்ஷன் இல்லாமல் தரப்படும் ஒரே அப்ளிகேஷன் ஸ்கை ட்ரைவ் அப்ளிகேஷன் தான். எனவே, நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஸ்கை ட்ரைவ் போல்டர், உங்கள் யூசர் ப்ரபைலில் காணப்படும். பயன்படுத்தாவிட்டாலும் அதன் ஒருங்கிணைக்கும் (synchronization service) சேவையும் எப்போதும் கிடைக்கும் வகையில் தயாராக இருக்கும். 

விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், ஸ்கை ட்ரைவின் சில மாறா நிலை அமைப்புகளை மட்டுமே மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம். 

வேர்ட், வேர்ட்பேட் அல்லது டாகுமெண்ட் தயாரிக்கப்படும் எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனில் நீங்கள் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்தால், அது ஸ்கை ட்ரைவின் துணை போல்டராக உள்ள Documents என்பதில் சேவ் செய்யப்படும். முந்தைய விண்டோஸ் சிஸ்டத்துடன் ஒப்பிடுகையில், இதில் ஒரு முக்கிய மாற்றம் உள்ளது. 

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவை மாறா நிலையில், Documents லைப்ரேரியில் சேவ் செய்யப்படும். விண்டோஸ் 8.1 சிஸ்டம் சேவ் செய்திடும் இடம் பிடிக்கவில்லை என்றால், அதனை விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டம் சேவ் செய்திடும் Documents லைப்ரேரிக்கு மாற்றிக் கொள்ளலாம். 

உங்களுடைய போல்டரில் காணப்படும் போட்டோக்கள் அனைத்தும் ஸ்கை ட்ரைவிற்குத் தானாக அப்லோட் செய்யப்படும். இந்த போல்டர் Pictures லைப்ரேரியில் இருக்கும். 

உங்கள் கம்ப்யூட்டரின் கேமரா அப்ளிகேஷன் இங்குதான் அனைத்து போட்டோக்களையும் சேவ் செய்திடும். பின்னர், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், இவை ஸ்கை ட்ரைவிற்கு அனுப்பப் படுகின்றன. இதனையும் நீங்கள் விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம்.

விண்டோஸ் 8.1, பைல்களை ஸ்கை ட்ரைவ் மூலம் ஒருங்கிணைத்து க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்வது நமக்கு நல்லதுதான். பைல்களை எங்கிருந்தும் பெறலாம்; மேலும் அவை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். 

ஆனால், சிலர், மைக்ரோசாப்ட் நம் மீது திணிக்கும் நடைமுறையாக இதனைக் கருதுகின்றனர். இதனால், பிரச்னை வரலாம் என எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு பயனாளரும் இது குறித்து தங்களின் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் உங்களுக்கு உகந்தபடி செயல்படலாம்.


19 Sept 2013

அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்

இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம். நீங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.
1 . PRINT WHAT YOU LIKE << Click
நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.
2 . ALERTFUL << Click
உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்
usefull webs அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
3 . PDF UNLOCK << Click
சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.
4 . DAILEEZ << Click
இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்
5 . ISI TRAINING << Click
இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.
6 . TYPING WEB << Click
இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.
7 . GEDOO << Click
இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி
8 . CVMAKER << Click
வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.
9 . ZOOM << Click
இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.

14 Sept 2013

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற


கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு "verification code" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் "online application" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்

http://eci-citizenservices.nic.in/default.aspx
அல்லது 

http://www.elections.tn.gov.in/eregistration/E_Registration.aspx

13 Sept 2013

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

நாம் நமது கணினியில் பல முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம் .இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் HARD DISK பார்மட் ஆகலாம் . அல்லது தவறாக நாமே அழித்துவிடலாம் . அல்லது வைரஸ் பிரச்சனையில் அழியலாம். இது போன்ற சூழலில் நாம் அழிந்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள் MiniTool Power Data Recovery Software. இது ரூபாய் 2000 மதிப்புடையது 
1. கிழே உள்ள டவுன் லோட் லிங்க்இல MiniTool Power Data Recovery Software தரவிறக்கி கொள்ளவும் .

2. அதில் SETUP.EXE முலம் INSTALL செய்யவும் .


3. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும் .



4. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும் .

5. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை REGISTER செய்ய வேண்டும் . கீழே  உள்ள SERIAL KEY FOR MiniTool Power Data Recovery Software என்ற WORD DOCUMENT இல உள்ள SERIAL KEY பயன்படுத்துங்கள் .





மென்பொருள் தரவிறக்க (For Download ) : MiniTool Power Data Recovery


Serial Key Download :   Serial key for Minitoll Data Recover

20 May 2013

கட்டாய பாதுகாப்பு சோதனைகள்.................





கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கம்ப்யூட்டர் மலரின் ஒவ்வொரு வார இதழிலும், பாதுகாப்பான பிரவுசிங், கம்ப்யூட்டர் பயன்பாடு, இணைய உலா ஆகியவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து பல தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. ஒரு சில எச்சரிக்கைகள் குறித்து எழுதப்படும்போது, அவற்றைக் குறிப்பிட்டு நமக்கு தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும், மின் அஞ்சல் செய்திகளும் வருகின்றன. சென்ற வாரம், மதுரை வாசகர் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய மொத்த வழிகளை முத்துக்களாய்த் தந்துவிடுங்களேன் என்று கேட்டுக் கொண்டார். அந்த வகையில் சிந்தித்த போது கிடைத்த சில எளிய ஆனால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.

1. சரியான ஸ்டாண்டர்ட் விண்டோஸ் அக்கவுண்ட்:விண்டோஸ் எக்ஸ்பியில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என்று ஒன்று அறிமுகப்படுத்தியது. ஏனென்றால், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் யூசர் அக்கவுண்ட் வரையறை செய்யப்பட்டு இருந்தது. எனவே, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் ஸ்டாண்டர்ட் அக்கவுண்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்டு அட்மினிஸ்ட்ரேட்டர் இயக்கம் தந்த பிரச்னை தீர்க்கப்பட்டது. இதன் மூலம் சரியான அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் கொடுத்து மட்டுமே செட்டிங்ஸ் மாற்றப்பட முடியும். கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மற்றும் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்களால் அதிக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவதில்லை. இந்த User Account Control வசதியை நாம் மேற்கொள்ள வேண்டும்.

2. பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் யூசர் அக்கவுண்ட்:ஒவ்வொரு யூசர் அக்கவுண்ட்டிற்கும் ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கும் முறையின் மூலம், நம் அனுமதியின்றி சிஸ்டத்திற்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல், Control Panel, User Accounts and Family Safety, User Accounts எனச் சென்று ‘Create a password for your account’ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். 

3. விண்டோஸ் அப்டேட் செட்டிங்ஸ்: சிஸ்டத்தினை அப்டேட் செய்திடுக என்று மெசேஜ் பெறுவது நமக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், இதனை அலட்சியப்படுத்துவது அதற்குச் சரியான தீர்வல்ல. விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில், கண்ட்ரோல் பேனல் திறந்து, System and Security என்பதில் கிளிக் செய்திடுக. அதன் பின்னர் Windows Upate அதன் பின் Change settings எனச் சென்று, அப்டேட் செய்திடுவதற்கான செட்டிங்ஸ் அமைக்கவும்.

4. செக்யூரிட்டி ஸ்கேன் செயல்படுத்துக: வாரம் ஒருமுறையாவது, ஹார்ட் ட்ரைவ் முழுவதும் ஸ்கேன் செய்திட வேண்டும். என்னதான், விண்டோஸ் மலிசியஸ் சாப்ட்வேர் பாதுகாப்பு மற்றும் ஆண்ட்டி வைரஸ் இயங்கினாலும், இந்த சோதனையையும் மேற்கொள்வது அவசியம்.

5. யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் செயல்படுத்துக: எக்ஸ்பி தொடங்கி, பின்னர் வந்த சிஸ்டங்களில் சந்தித்த அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, யூசர் அக்கவுண்ட் தற்போது விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 சிஸ்டங்களில் செயல்படுகின்றன. இவற்றைச் செயல்படுத்துவது அவசியம். 

6. விண்டோஸ் ஆண்ட்டி வைரஸ் சாதனங்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைத் தந்துள்ளது. இது தவிர, கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் பல தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தினாலும், மைக்ரோசாப்ட் தந்துள்ள புரோகிராமினையும் பயன்படுத்த வேண்டும். 

7. பயர்வால் பாதுகாப்பு: கம்ப்யூட்டர் மற்றும் இணைய இணைப்பிற்குப் பயன்படுத்தும் ரௌட்டர் ஆகியவற்றில் பயர்வால் பாதுகாப்பினை ஏற்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்துவது, கூடுதலான பாதுகாப்பினைத் தரும்.

8. வை-பி செட்டிங்ஸ் அமைப்பு: கம்ப்யூட்டரில் உள்ள வை-பி செட்டிங்ஸ் முறை பழைய WEP முறையில் இருந்தால், அதனை மாற்றி அமைக்க வேண்டும். பழைய முறை பாதுகாப்பற்றது என இப்போது பயன்படுத்தப் படுவதில்லை. தானாக, வை-பி இணைப்பினைத் தேடும் வகையில் செட்டிங்ஸ் இருந்தாலும் மாற்றி அமைக்க வேண்டும். 

9. புதிய வெப் பிரவுசர்: எப்போதும் நாம் பயன்படுத்தும் இணைய பிரவுசர், அண்மைக் காலத்தில் மேம்படுத்தப் பட்டுத் தரப்படுவதாக இருக்க வேண்டும். இதனால், புதிய பிரவுசர்களில் தரப்படும் பாதுகாப்பு வசதி நமக்குக் கிடைக்கும். 

10. அறியாத அழைப்புகள்: தேவையற்ற, நாம் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை அறவே ஒதுக்க வேண்டும். அறிந்தவர்களிடமிருந்து கூட எதிர்பாராத வேளைகளில் வரும் அழைப்புகளைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

11. வெவ்வேறு பாஸ்வேர்ட்: இணைய செயல்பாடுகள் அனைத்திற்குமாக, ஒரே பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் ஒரு பிரவுசரில் இது கண்டறியப்பட்டால், நீங்கள் முற்றிலுமாக உங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.

12. பாஸ்வேர்ட் சோதனை: பே பால் மற்றும் கூகுள் போன்ற நிறுவன தளங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இப்போதெல்லாம் இரு நிலை பாதுகாப்பு சோதனை வசதி தரப்பட்டுள்ளது. இவற்றில் நுழையும் போது, உங்கள் மொபைல் போனுக்கு பாதுகாப்பு குறியீடு அனுப்பப்பட்டு, அதன் மூலமே, நீங்கள் இவற்றை அணுகும் வகையில் இது அமைக்கப்படுகிறது. இதனை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

உயர்கல்விக்கான நூல்கள் இலவசமாகப் பெற




கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி

http://bookboon.com.

இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும். 
உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது. கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.

வருகிறது "விண்டோஸ் புளு'



விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகையில், உலகில் 67 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுவதாகவும், இவை யாவும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிவிடுவார்கள்' என்று நம்பிக்கையுடன் கூறினார், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி பால்மெர். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. பல மூலைகளிலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பல்வேறு கூறுகளுக்கு எதிர்ப்பு வந்தது. குறிப்பாக, ஸ்டார்ட் மெனு இல்லாதது குறையாகச் சொல்லப்பட்டது. பொது ஜன தொடர்பு நிறுவனங்கள் மூலம், மைக்ரோசாப்ட் மக்களிடம் தன் புதிய சிஸ்டத்தினைக் கொண்டு செல்லப் பார்த்தது. எந்த முயற்சியும் பலனளிக்காததால், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை விண்டோஸ் புளு என்ற பெயரில் வெளியிட இருப்பதாகச் செய்திகள் வந்தன. தற்போது விண்டோஸ் 8.1 என அது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஸ்டார்ட் பட்டனை நீக்கியது, அதற்குப் பதிலாகச் சதுர கட்டங்கள் வழி அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தந்தது, கம்ப்யூட்டர் இயக்கம் தெரிந்தவர்கள் கூட புதிய விஷயங்களைச் சிரமம் எடுத்து கற்க வேண்டிய நிலை ஆகியவற்றால், விண்டோஸ் 8 எதிர்பார்த்தபடி மக்களை அடையவில்லை. துரதிருஷ்டவசமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை உணர்ந்து கொள்ள ஆறு மாதம் பிடித்தது. மேலும், பல நிறுவனங்கள் தங்கள் பழைய விண்டோஸ் சிஸ்டத்திலேயே இயங்க முடிவெடுத்தன. இன்னும் பல பிரிட்டன் நிறுவனங்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்கிக் கொண்டுள்ளனர். 
மேலும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அடிப்படையிலேயே, டேப்ளட் பிசிக்களையும் இயக்கும் வகையில், சிஸ்டத்தினை வடிவமைத்தது. இதனை ஒரு சிறப்பான அம்சமாக எடுத்துரைத்தது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கு ஓர் அடி கொடுக்கலாம் என்று கணக்கு போட்டது. அது தப்பாகி விட்டது. இந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தன் மேக் கம்ப்யூட்டர் மற்றும் ஐபேட் சிஸ்டங்களிடையே வேறுபாட்டினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வேறுபாடுகளே, இரண்டின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்தும் வருகின்றன.
மைக்ரோசாப்ட் எப்போதும், தன் சிஸ்டங்களில், அதி நவீன வசதிகளைத் திணிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும். ஆனால், அவை தெளிவற்றும், திறன் குறைவாகவுமே இருக்கும். விண்டோஸ் விஸ்டா வெளி வந்த போது, விட்ஜெட் என்ற வகை வசதிகள் இந்த வகையில் இருந்தன. இவை டெஸ்க் டாப்பில் பார்ப்பதற்கு எடுப்பாக இருந்தன. ஆனால், திறனில் கோட்டைவிட்டன. ஆபீஸ் தொகுப்பில் காணப்படும் புதிய ஐகான்களும் இதே போல, சிஸ்டத்தின் செயல் திறனை முடக்கிப் போட்டன. 
விண்டோஸ் 8 பொறுத்தவரை, அது டச் ஸ்கிரீன் செயல்பாடு மற்றும் டெஸ்க்டாப் வகை செயல்பாடு என இருவகைக்குமாக அமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. சில புரோகிராம்கள் தொடுதிரை செயல்பாட்டில் இயங்குகின்றன. சில டெஸ்க்டாப் வகையில் மட்டுமே இயங்குகின்றன. இதனால், இரு வண்டிகளில் பயணிக்கின்ற அவஸ்தையை மக்கள் அனுபவித்தனர். பலர் எந்த வண்டியும் வேண்டாம்; பழைய வாகனமே போதும் என விண்டோஸ்7 பக்கம் திரும்பினர். 
புதியதாக விரைவில் வெளியிடப்பட இருக்கும் விண்டோஸ் 8.1 மேம்படுத்தப்பட்ட சிஸ்டத்தில் இந்த குறைகள் களையப்பட்டுக் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - டிவைஸ் மேனேஜர் - ஏன்? எதற்கு?





கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் "டிவைஸ் மேனேஜர்' மவுஸ், கீ போர்ட், மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர் பிரிவுகளும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப் படுகின்றன என்று இதில் தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று அமைத்திடலாம். இதன் மூலம் ட்ரைவர் புரோகிராம்களை அப்டேட் செய்திடலாம்; ஹார்ட்வேர் அமைப்பு வழிகளை மாற்றிடலாம்; பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம். ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால், டிவைஸ் மேனேஜர் சென்று அந்த குறிப்பிட்ட சாதனம் எப்படி செட் செய்து அமைக்கப்பட்டுள்ளது என்று பார்த்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம். ஹார்ட்வேர் பிரிவுகள் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்து கொள்வதில் தவறில்லை.ஆனால் இவை எல்லாம் நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில் கை வைக்க வேண்டும். 
டிவைஸ் மேனேஜரைப் பெற்றுக் காண, My Computer/ Computer ஐகானை ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில் Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால், கிடைக்கும் விண்டோவில் Device Manager என்ற பட்டன் காணப்படும். இதனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப் பெறலாம். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும். ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்க நிலையை அறிய வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரியவரும். அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டேப்களில் General என்ற டேபைக் கிளிக் செய்தால் Device status பாக்ஸ் கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச் செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும். அதில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம். குறிப்பிட்ட பிரிவின் தன்மை, வேலைத் திறன் மற்றும் பிற விபரங்களை அறிந்த பின்னரே இதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மாற்றங்களை மேற்கொள்ளும் முன், அவை எந்நிலையில் இருந்தன என்பதனையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்