20 May 2013

போர்ட்டபிள் சாப்ட்வேர் தொகுப்பு மென்பொருள்


போர்ட்டபிள் சாப்ட்வேர் என்றால் என்ன? 


போர்ட்டபிள் சாப்ட்வேர் என்பது கணனியில் அந்த மென்பொருளை நிறுவாமல் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மென்பொருளாகும். அதாவது சாதாரணமாக நமக்குத்தேவையான மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பிறகு அதில் .exe கோப்பை இயக்கிய பிறகே அந்த மென்பொருள் நம்முடைய கணனியில் நிறுவப்பட்டு, பிறகுதான் அதை நாம் இயக்கிப் பயன்படுத்த முடியும்.  

அவ்வாறில்லாமல் கணினியில் நிறுவாமல் ப்ளாஷ் டிரைவ் (Flash Drive)  மூலம் நேரடியாக பயன்படுத்தும் மென்பொருள் போர்ட்டபிள் சாப்ட்வேர் ( Portable software)எனப்படும். 



இன்றைய தொழில்நுட்பங்கள் அதிக வளர்ச்சியடைந்து விட்ட இச்சூழ்நிலையில் கணனியில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான மென்பொருள்களுமே போர்ட்டபிள் சாப்ட்வேராக (All portable software in one place) வந்துவிட்டன.

அவற்றில் Operating system software முதல், photo editing software, browsers வரை அனைத்து மென்பொருள்களுமே போர்ட்டபிளாக உருவெடுத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 

இத்தகைய போர்ட்டபிள் சாப்ட்வேர்களை உங்களுடைய பென்டிரைவில் ஒரு முறை தரவிறக்கம் செய்துகொண்டால் போதுமானது.(One time software install) நீங்கள் எந்த ஒரு கணனியிலும் போர்ட்டபிள் மென்பொருள்களை பயன்படுத்தலாம். (You can use portable software any computer)

ஒரு கணனி பயனருக்குத் தேவையான முக்கியமான மென்பொருள்கள் அனைத்தையுமே போர்ட்டபிள்.காம் தொகுத்து வழங்குகிறது.

இத்தொகுப்பினை உங்கள் பென்டிரைவில் ஒரு முறை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொண்டால் போதுமானது. 

Features of Portable apps software 


நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள கணினிகளில் உங்களுடைய பென்டிரைவைப் பொருத்தி பயன்படுத்த தொடங்கிவிடலாம். 

கணினியில் உள்ள programe start menu வைப் போன்றே இந்த மென்பொருளிலும்(portablesoftware.com) மெனு ஒன்று தோன்றும். அதில் உள்ள மென்பொருள்களை இயக்கிப் பயன்படுத்தலாம். தேவையெனில் உங்களுக்கு வேண்டிய மென்பொருள்களை கூடுதலாக தரவிறக்கம் செய்தும் இந்த மெனுவில் இணைத்துப் பயன்படுத்தலாம். 

மிகச்சிறந்த பயனுள்ள இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த செல்ல வேண்டிய முகவரி: http://portableapps.com/

16 May 2013

கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!


தினமும் புதிய  புதிய வைரஸ்களும், மால்வேர்களும் உருவாக்கப்பட்டு இணையம் கணினிகளைத் தாக்கி, கணினிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறது. 

ஹேக்கர்கள் என அழைக்கப்படும் இணைய வழி நுட்ப திருடர்களின் வேலை இது. ஏதாவது ஒரு இணைப்பின் (Link) மூலமாகவோ அல்லது தரவிறக்கம் மேற்கொள்ளும்பொழுது (Download) அதனுடன் இணைந்து இந்த தீங்கிழைக்கும் மென்பொருளும் கணினியில் நுழைந்துவிடுகிறது. 

இது நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. இதனை ஆண்டி வைரஸ் மென்பொருள்களின் மூலமே கண்டறிய முடியும்.

சில சமயம் இந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் தொகுப்பையும் (Anti virus sofware) மீறி சில மால்வேர்கள் கணினியில் தம்முடைய வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். இத்தகைய மால்வேர்களை கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் ஆண்டி வைரஸ் மென்பொருளால் கண்டறிந்து அழிக்க முடியாது.

அதுபோன்ற சமயங்களில் மால்வேர் தொகுப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் System Sweeper என்ற மென்பொருளை வழங்குகிறது. இது முற்றிலும் இலவசமே..

இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் பதிந்திருந்தாலும் கூட பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்துவதால் மால்வேர் பாதிப்பிலிருந்து உங்களுடைய கணினியை நீங்கள் பாதுகாத்திட முடியும். ஆண்டி வைரஸ் மென்பொருளுடன் மைக்ரோசாப்டின் சிஸ்டம் ஸ்வீப்பர் மென்பொருளையும் பயன்படுத்துவதால் உங்கள் கணினிக்கு கூடுதல் பாதுக்காப்பு கிடைக்கும்.

சிஸ்டம் ஸ்வீப்பர் மென்பொருளின் பயன்கள்: (Features of System sweeper)

  • இது மால்வேர் மற்றும் ஸ்பைவேர் நச்சு நிரல்களுக்கு எதிராக திறமையாக செயல்பட்டு அவற்றை நீக்கிட உதவுகிறது.
  • மைக்ரோசாப்டின் தயாரிப்பு என்பதால் நம்பகத்தன்மை அதிகம்.
  • இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இம்மென்பொருளைப் பயன்படுத்த முடியும். எனவே இணைய இணைப்பு இல்லாத கணினியில் நிறுவியும் பயன்படுத்தலாம்.
  • நேரடியாக கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது என்றாலும் Removal Device களான Pendrive, CD, DVD போன்றவைகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். 
  • அதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் இதை எளிதாக எடுத்துச்  செல்லலாம்.. 
  • நீங்கள் வெளியிடங்களில் மற்ற கணினிகளைப் பயன்படுத்தும்பொழுதும் அக் கணினியை  இம்மென்பொருள் மூலம் மால்வேர் உள்ளதா என சோதித்து அறிந்துகொள்ள முடியும்.
  • வைரஸ் பிரச்னை காரணமாக உங்களுடைய கணினி Boot ஆகவில்லை என்றால் இம் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்கும் சிடியைப் பயன்படுத்தி பூட் செய்து கொள்ள முடியும் என்பது இம்மென்பொருளின்  கூடுதல் பயன். அவ்வாறு கணினியை தொடங்கச் செய்யும்பொழுது, கணினி boot ஆகாமல் தடுத்த வைரஸ், மால்வேர்களை, அழித்து, கணினி பூட் செய்கிறது.
  • இந்த  மென்பொருள் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் (Malware and spyware attacks) தாக்குதலிருந்து கணினி பாதுகாக்க மட்டுமே அன்றி ஒரு முழுமையான ஆண்டி வைரஸ் மென்பொருள் இல்லை. அதனால் ஏற்கனவே உங்கள் கணனியில் உள்ள ஆண்டி வைரஸ் மென்பொருளை அப்படியே பயன்படுத்துங்கள்..
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி: Download Free Microsoft's System Sweeper

உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பி விட்டதா? எளிய தீர்வு..!


"உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ  அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.

முதலில்,  ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம்.

உங்கள் கணினியில் நீங்கள் எப்பொழுதாவது பயன்படுத்தவென பதிந்திருக்கும் மென்பொருள்களை நீக்குங்கள். அடுத்து temp கோப்புகளை நீக்குங்கள்.

அப்படி நீக்கியும் கூட,  உங்களுடைய கணினியில் மீண்டும் 'ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லை. கோப்புகளை நீக்குங்கள்'  என்ற எச்சரிக்கை செய்தியைக் காட்டினால், கீழ்க்கண்ட மென்பொருள்கள் உங்களுக்கு உதவும்.

இம்மென்பொருள் எதற்காக என்றால், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ட்ரைவ்களில் (அதாவது C:, D:, E:, F:, என ஹார்ட் டிஸ்க் பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கும் இல்லையா? )ஒவ்வொரு டிரைவும் எந்தளவிற்கு கோப்புகளை கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு டிரைவின் கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது, அந்த டிரைவில் எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்துள்ளன என்பதை நமக்கு சரியாக காட்ட இந்த மென்பொருள்கள் பயன்படுகின்றன.

டிரீ சைஸ் ஃபீரீ மென்பொருள் -(TREE SIZE FREE)

இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் ஒவ்வொன்றும் எவ்வளவு இடத்தை பெற்றுள்ளது? ஒவ்வொரு டிரைவில் எந்த கோப்புகள் அதிகமான இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன என்பதை துல்லியமாக ஒரு சில வினாடிகள் உங்களுக்கு காட்டும்.

கிராஃபிக்ஸ் பார் மூலம் ஒவ்வொரு கோப்பும் அந்த டிரைவில் எடுத்துள்ள இடத்தை காட்டும். இந்த கிராஃபிக்ஸ் பார் மற்றும் வரைபட வடிவில் உள்ள இந்த அளவீடுகளில் உள்ள வண்ணங்களை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.

இதன்  அடிப்படையில் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை நீக்குவது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: http://www.jamsoftware.com/treesize_free

இதனை போன்றே ஹார்ட் டிஸ்க்கில் அதிக அளவு இடம்பெற்றுள்ள கோப்புகள் மற்றும் டிரைவ்களை கண்டறிய உதவும் மற்ற மென்பொருள்:

2. WINDIRSTAT
தறவிக்கம் செய்ய: http://windirstat.info/download.html
3.  XINORBIS
தறவிக்கம் செய்ய: http://www.xinorbis.com/
4.  RIDNACS
தறவிக்கம் செய்ய:  http://www.splashsoft.de/Freeware/ridnacs-disk-space-usage-analyzer.html
5. SPACE SNIFFER
தறவிக்கம் செய்ய: http://www.uderzo.it/main_products/space_sniffer/

குறிப்பு: டிஸ்க் ஃபைட்டர் என்ற இந்த மென்பொருளும் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி, உங்கள் Hard Disk -ல் உள்ள இடத்தை மீட்டுக்கொடுக்கிறது.

தரவிறக்கம் செய்ய: http://www.spamfighter.com/FULL-DISKfighter/Functions/Download.asp 

யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட






தற்போது தரவுகளை கணினிகளுக்கிடையே பறிமாற்றம் செய்து கொள்ள பெரும்பான்மையான கணினி பயன்பட்டாளர்களால் பயன்படுத்தபடுவது யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் ப்ளாஷ் ட்ரைவுகள் ஆகும். நாம் பயன்படுத்தும் கணினி மற்றும் செல்போன் ஆகிய சாதனங்களுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்போம், கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க காரணம் அதில் இரகசியமான தகவல்கள் மற்றும் கோப்புகளை வைத்திருப்பதனால் மட்டுமே, அதே போல் தான் யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவிலும் இரகசியமான கோப்புகளை வைத்திருப்போம் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க வேண்டும்.


யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டுவது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதற்கென பல மென்பொருள்கள் இணையத்தில் இருந்தும் பெயர் சொல்லும் அளவிற்கு சிறப்பான மென்பொருள் என்று ஏதும் இல்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. கடவுச்சொல் கொண்டு பூட்ட BitLocker வழிவகை செய்கிறது.

முதலில் எந்த யுஎஸ்பி அல்லது ப்ளாஷ் ட்ரைவிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதனை கணினியுடன் இணைக்கவும், பின் கன்ட்ரோல் பேனலை ஒப்பன் செய்யவும், அதற்கு விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் ரன் விண்டோவில் Control என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.


பின் கன்ட்ரோல் பேனல் ஒப்பன் ஆகும், அதில் BitLocker Drive Encryption என்னும் ஐகானை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நீங்கள் எந்த யுஎஸ்பி அல்லது ப்ளாஷ் ட்ரைவிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதன் ட்ரைவ் எது என குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின் Turn on BitLocker என்னும் சுட்டியை கிளிக் செய்யவும்.


அடுத்து உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் சோதிக்க பட்டு, பின் BitLocker என்கிரிப்ஷன் செய்வதற்கான வேலை ஆரம்பம் ஆகும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் மீண்டும் மறுஉள்ளீடு செய்து Next பொத்தானை அழுத்தவும்.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Save to a file என்னும் பட்டியை கிளிக் செய்யவும். பின் ஒரு டெக்ஸ்ட் கோப்பு ஒன்று கணினியில் சேமிக்கபடும். அதில் ஒரு கீ இருக்கும். அதை கொண்டு பிட்லாக்கர் என்கிரிப்ஷன் கடவுச்சொல் மறக்கும் போது மீட்டெடுக்க உதவியாக இருக்கும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Encrypt used disk space only  என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும்.


பின் அடுத்து தோன்றும் விண்டோவில் Start Encrypting என்னும் என்னும் பொத்தானை அழுத்தி, ப்ளாஷ் ட்ரைவினை என்கிரிப்ட் செய்யவும்.


சிறிது நேரத்தில் ப்ளாஷ் ட்ரைவ் முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.


பின் நீங்கள் ப்ளாஷ் ட்ரைவினை பாதுகாப்பான முறையில் கணினியில் இருந்து நீக்கி கொள்ளவும்.பின் நீங்கள் இந்த ப்ளாஷ் ட்ரைவினை கணினியில் இணைக்கும் போது கடவுச்சொல் உள்ளிட்ட பின்புதான் ஒப்பன் ஆகும்.



பின் ப்ளாஷ் ட்ரைவினை முழுவதுமாக ஒப்பன் செய்ய, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, எந்த ட்ரைவினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை இரட்டை கிளிக் செய்யவும். இல்லையெனில் அந்த ட்ரைவ் மீது வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Unlock Drive என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.


பின் கடவுச்சொல்லை தோன்றும் விண்டோவில் உள்ளிட்டு, பின் Unlock என்னும் பொத்தானை அழுத்தவும். அப்போது மூடப்பட்டிருந்த ப்ளாஷ் ட்ரைவ் ஒப்பன் செய்யப்படும்.


பின் நீங்கள் இந்த ப்ளாஷ் ட்ரைவினை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். கோப்புகளை பறிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

ப்ளாஷ் ட்ரைவ் கடவுச்சொல் மறந்துவிட்டால்

யுஎஸ்பி ட்ரைவிற்கு நாம் உருவாக்கிய கடவுச்சொல்லை மறந்து விட்டாலும் அதனை ஒப்பன் செய்யவும் வழி உள்ளது. ப்ளாஷ் ட்ரைவ் உருவாக்கும் போது ஒரு இடத்தில் டெக்ஸ்ட் கோப்பு ஒன்றினை ஒரு இடத்தில் சேமித்து வைத்திருப்போம் அதனை ஒப்பன் செய்தால் அதில் இரகசிய கோடு இருக்கும் அதனை கொண்டு எளிதாக ஒப்பன் செய்துவிட முடியும். இருப்பியல்பாக My Document ல் டெக்ஸ்ட் கோப்பு சேமிக்கப்பட்டிருக்கும்.


ப்ளாஷ் ட்ரைவினை ஒப்பன் செய்யும் போது, கடவுச்சொல் கேட்கும் அப்போது அதற்கு கீழே More Option என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யும் போது Enter recovery Key என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


அப்போது 48 இலக்க இரகசிய கீ கேட்கும் அதை உள்ளிட்டு Unlock பொத்தானை அழுத்தவும். இப்போது பூட்டு திறக்கப்படும். வழக்கம் போல் ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கடவுச்சொல்லை நீக்க
ப்ளாஷ் ட்ரைவிற்கு பிட்லாக்கர் மூலம் உருவாக்கிய கடவுச்சொல்லை முழுவதுமாக நீக்கம் செய்ய முதலில் எந்த ட்ரைவிற்கான கடவுச்சொல்லை நீக்க நினைக்கிறீர்களோ அந்த ப்ளாஷ் ட்ரைவினை கணினியுடன் இணைக்கவும். பின் முன்பு கூறியது போல் கன்ட்ரேல் பேனல் சென்று பின் BitLocker Drive Encryption என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் நீங்கள் நீக்க நினைக்கும் ப்ளாஷ் ட்ரைவிற்கு எதிரே Turn off BitLocker என்னும் பொதியை கிளிக் செய்யவும்.


சிறிது நேரத்தில் முழுவதுமாக டிகிரிப்ஷன் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும். அதாவது கடவுச்சொல் நீக்கப்பட்டு விட்டது என்பதாகும். இந்த முறையை பயன்படுத்தி எளிதாக யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவுகளுக்கு கடவுச்சொல்லை உருவாக்க முடியும்.

கணினியின் வேகத்தை அதிகரிக்க Baidu PC Faster

கணினியில் இயங்குதளம் நிறுவி நாட்கள் ஆகிவிட்டது அதனால் தான் இயங்குதளம் மந்தமாக செயல்படுகிறது எனவே மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டும் என்று சில கணினி வல்லுனர்கள் கூறுவார்கள் அது மிகவும் தவறான விஷயம். கணினி அவ்வாறு மந்தமாக செயல்படும் போது கணினியில் இருக்கும் தேவையற்ற ரிஸிஸ்டரி பைல்கள், ஜங் பைல்களை நீக்குவதன் மூலம் கணினியின் வேகத்தை அதிகரிக்க முடியும். மேலும் வன்தட்டினை டிபிராக்மெண்டேஷன் செய்வதன் மூலமாகவும் கணினியின் வேகத்தை கூட்ட முடியும்.


கணினியில் தேவையில்லாமல் நிறுவியிருக்கும் மென்பொருள்களை நீக்கம் செய்வதன் மூலம் கணினி வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும். கணினியில் இருக்கும் தேவையற்ற பைல்களை சிறப்பாக நீக்கம் செய்யவும், ரிஸிஸ்டரியை மேலும் சீர் செய்யவும். Baidu PC Faster என்ற மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கி கணினியில் முழுமையாக நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் வேண்டும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, பின் Cleaner என்னும் டேப்பினை தேர்வு செய்து பின் SCAN பொத்தானை அழுத்தவும் அழுத்தியவுடன் தேவையற்ற பைல்களை வரிசைப்படுத்தும், பின் Clean பொத்தானை அழுத்தவும். அப்போது தேவையற்ற ரிஸிஸ்டரி பைல்கள், ஜங் பைல்கள் கணினியில் இருந்து நீக்கப்படும்.


மேலும் இந்த மென்பொருளில் இணைய வேகத்தை அறிந்து கொள்ளவும். அழிந்த கோப்புகளை மீட்டெடுக்கவும் முடியும். தனித்தனியே மீட்டெடுக்கும் வசதியும் உள்ளது.  குப்பைதெட்டியை தனியே ஸ்கேன் செய்து மீட்டெடுக்கவும் முடியும்.


கணினிக்கு தேவையான மென்பொருள்களையும் இந்த அப்ளிகேஷனில் இருந்த படியே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அனைத்து மென்பொருள்களும் வகை வாரியாக உள்ளது. வேண்டிய மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 


மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் கணினியை பற்றிய விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களில் செயல் படக்கூடியது ஆகும்.

சாப்ட்வேரினை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்திட


சில சாப்ட்வேர்களை பயன்படுத்தியபின் அன்இன்ஸ்டால் செய்வது சிரமம். அவ்வாறு அடம்பிடிக்கும் சாப்ட்வேர்களை சுலபமாக நீக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பி.கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் உங்களிடம் உள்ள சாப்ட்வேர்கள் அதன் அளவு அதனை நாம் க ணிணியில் இன்ஸ்டால் செய்த தேதி ஆகியவிவரங்கள்  தெரியவரும் பெயரைவைத்தோ -அளவினை கொண்டோ அல்லது நாம் இன்ஸ்டால் செய்த தேதியை கொண்டோ சாப்ட்வேரினை சுலபமாக நீக்கிவிடலாம்.
தேவையில்லாத சாப்ட்வேரினை தேர்வு செய்தபின்னர் அதை ரைட்கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் உள்ள அன்இன்ஸ்டால் கிளிக் செய்யவும்.சில நிமிட காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நமது சாப்டவேரின் ரீஜிட்டரி சம்பந்தபட்ட பைலையும் இந்த சாப்ட்வேர் நீக்கிவிடுகின்றது.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

கணினியில் எழுத்துக்களை தெளிவாக காண..




மைக்ரோசாப்டின் ClearType Tuner PowerToy என்ற கருவி இந்த வசதியை தருகிறது. இது ஒரு Control panel applet ஆகும். இதை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு உங்கள் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் Clear Type Tuner என்ற அப்லெட் உருவாகியிருப்பதை கவனிக்கலாம். இதை ரன் செய்து தொடரும் விசார்டில் நமக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து முடித்தப்பின், இது போன்ற கண்களை உறுத்தாத தோற்றத்தை பெறலாம்.



மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்குங்க..

அறிமுகமாகின்றது Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன்


இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கிவந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக்கூடியதான பதிப்பை அறிமுகப்படுத்துகின்றது.
இம்மாதம் வெளியிடப்படவுள்ள Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் மொபைல் சாதனங்களிலிருந்து டெக்ஸ்டாப் கணனிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடியதாகவும் ஒரே கணக்கினை டெக்ஸ்டாப், மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தும்போது ஏதாவது ஒரு சாதனத்திற்கு அனுப்பப்பட்ட செய்தியினை மற்றைய சாதனத்தில் படிக்கக்கூடியதாகவும், ஒரு சாதனத்தில் குறுஞ்செய்தி அழிக்கப்படும்போது மற்றைய சாதனத்திலிருந்தும் அழிந்துபோகக்கூடிய வகையிலும் இப்புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.


3 May 2013

TERACOPY மென்பொருள் இலவசமாக

Teracopy என்னும் மென்பொருள் ஒரு கோப்பை வேகமாக copy செய்ய உதவுகிறது பெரும்பாலும் அனைவரும் இந்த மென்பொருளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அதனால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன் ... 
windows 8 இல் அனைவரும் ஒரு பிரச்னையை சந்திதிருபீர்கள் அது என்னவென்றால் windows 8இல்  ஒரு கோப்பை copy செய்யலாம் என்று நினைத்தால் அந்த கோப்பு paste ஆக அதிக நேரம் பிடிக்கும் windows 8இன் copy செய்யும் வேகம் windows 7 ஐ விட மிக மெதுவாக இருக்கும் ....
இது உங்களில் பல பேரை எரிச்சலடைய செய்திருக்கும் அதை தீர்த்துவைக்க இந்த மென்பொருள் பயன்படும் ...


இந்த மென்பொருளின் pro versionஐ நான் உங்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளேன் ...


இங்கே சென்று முழு பதிப்பையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் ...

22 Mar 2013

விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்

kingdomofklk,antivirus,video,player,cam
கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல
ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள்
 யாருமே தங்களுடைய கணினியில் சரியாக மென்பொருள்களை
 நிறுவி பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலும் ஒன்றுக்கும் அதிகமான
 வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், மற்றும் உலாவிகளை நிறுவி
இருப்பார்கள் தவிர அவசியமான இன்னும் பிற மென்பொருள்களும்
கணினிக்கு கட்டாயம் தேவை.

விண்டோஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவி விடுவோம்.
 பின் ஆண்டிவைரஸ் நிறுவுவோம். பின் தேவையான ட்ரைவர்
நிறுவுவோம். இன்னும் ஒருசில மென்பொருள்களை நிறுவிவிட்டு
அப்படியே விட்டுவிடுவோம்.  ஒரு இரண்டு மாதங்களுக்கு பிறகு
கணினியானது மந்தமாக செயல்படும் இதற்கு காரணம்.
 அவ்வப்போது தற்காலிகமாக தங்கும் கோப்புகளை
 நீக்கம் செய்யாதது. முறையாக மென்பொருள்
நிறுவாமை போன்ற பல காரணங்கள் ஆகும்.

விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்தவரை கட்டாயமாக
 25 மென்பொருள்கள் இருத்தல் அவசியம் ஆகும்.
 அவை எவையென்று பார்ப்போம்.

19 Mar 2013

மொபைலிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்ப Bambuser மொன்பொருள்




கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.

பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.
மேலும் கணினி Web Camera-விலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். உங்களது ஒளிபரப்பினை உங்கள் Blog-ல் Gadjet-ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.

தேவை:
            1.உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.
            2.உங்கள் செல்பேசி Android,Apple,bada,meamo 5,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam UIQ3,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.
           3.இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் போனை கிளிக் செய்து உங்களுக்கான Application-ஐ தறவிறக்கி கொள்ளவும்.
           4.பின் அந்த Application-ஐ திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்

14 Mar 2013

WhatsApp மொன்பொருள்



                                       
உங்கள் மொபைலிருந்து WhatsApp மொன்பொருள் உதவியுடன்
உங்கள் நண்பர்கள்வுடன் அரட்டை அடிக்கலாம்
இதில் உள்ள வசதிகள்:
  • IMAGE
  • VIDEO
  • AUDIO
  • NEW PHOTO
  • NEW VIDEO
  • NEW CLIP
  • LOCATION
  • CONTACT

போன்ற வசதிகள் உள்ளது. இந்த மொன்பொருள் உதவியுடன் இணையதளம் மூலமாக நண்பர்கள் உடன் செய்திகளை உடன்னுகுடன் பகிர்ந்துகொள்ளாம்.Group Message மற்றும் Personal Message அனுப்பும் வசதி உள்ளது.
இந்த மொன்பொருளைinstalசெய்ய வேண்டும்.
இந்த வசதிகள் உள்ள செல்போன்Android,Apple,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam ,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.

15 Feb 2013

அஷத்தாலான 6 மென்பொருள் (Softwares)

Adobe Photoshop 7.0 with Serial Key (Full Version ) இலவசமாக டவுன்லோட் செய்ய


kingdomofklk,adobe photoshop7,photshop

kingdomofklk,adobe photo shop7,photoshop


----------------------------------------------------------------------------------------------------------------------

CyberLink powerdirector 9 with key Full Version  இலவசமாக டவுன்லோட் செய்ய


25 Dec 2012

பவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக மாற்றுவது எப்படி.?


பவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறும் போது அதனை பவர்பாயிண்ட் பைல்களாக காட்டுவோம். கருத்துகணிப்பு விவரங்களையும் பவர்பாயிண்ட் பைல்களாகவே உருவாக்குவோம். இந்த பைல்களை நாம் உரிய மென்பொருள் துணையுடன் மட்டுமே காண முடியும். இதுபோன்ற பைல்களை நாம் இணையத்தில் முழுமையாக வெளியிட இயலாது, இதனால் பல்வேறு சிக்கல்கள் எழும். இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் இருக்க பவர்பாயின்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். இணையத்தில் உலவும் கணினி பயனாளர்கள் ப்ளாஷ் பைல்களை கண்டிருக்க முடியும். பவர்பாயிண்ட் பைல்களை, ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய்ய authorPOINT Lite என்ற மென்பொருள் உதவுகிறது. 

மென்பொருளை தரவிறக்க

28 Oct 2012

CCleaner - கணினியை வேகப்படுத்தும் மென்பொருள்-New Version 3.24.1850




சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
ஏற்படுத்துவதுடன், விண்டோஸ் இயக்கத்தினையும் வேகமாகச் செயல்பட வைக்க நாம் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம். இதன் இன்னொரு சிறப்பு இதன் இயக்க வேகம் தான். மிக வேகமாக இயங்குவதுடன், இதில் எந்த விதமான ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் இருப்பதில்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், கூகுள் குரோம், ஆப்பரா, சபாரி, விண்டோஸ் ரீசைக்கிள் பின், ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் லிஸ்ட், தற்காலிக பைல்கள், லாக் பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி ஆகியவற்றை இது சுத்தப்படுத்துகிறது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7


Size:3.82MB

22 Oct 2012

VLC Media Player - மீடியா பிளேயர் மென்பொருள் 2.0.4


வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற வீடியோ பிளேயர்

புரோகிராம்களுடன் ஒப்பிடுகையில், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலையும் இயக்கும் திறன் கொண்டது வி.எல்.சி. பிளேயர். இந்த புதிய பதிப்பு முதலில் “Twoflower” என்ற குறியீட்டுப் பெயருடன் உருவாக்கப்பட்டது. தற்போது “VLC 2.0” என்ற பெயருடன் வெளியாகியுள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன.

19 Oct 2012

இலவசமான முன்னணி 5 Audio Recording & Editing Software


alternatives to audacityஇன்று இசைத்துறை என்பது இசைக்கருவிகளை நம்பி இல்லை. எந்த இசையையும் கணணி மற்றும் அதனோடு இணைந்த தொழில்நுட்ப கருவிகள் மூலம் உருவாக்கி விட முடியும். A.R. Rahman கூட தானும் இவற்றையே அதாவது Apple நிறுவனத்தின் Mac கணனியில்  Appleஇன் தயாரிப்பான Logic Pro என்ற மென்பொருளையே 12 வருடங்களாக பயன்படுத்துவதாகவும் Slumdog Millionaire படத்திலும்  oscar விருதிலும்  இதுவே துணை புரிந்ததாக கூறி இருக்கிறார். நம்ப முடியவில்லையா? நீங்களே சென்று www.apple.com/ இல் பாருங்கள். நீங்கள் இப்போது A.R. Rahman போல வருவதற்கு மென்பொருட்களை பயன் படுத்த வேண்டாம். உங்கள் வீட்டில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பான்படுத்துங்கள். Logic Pro 9 பதிப்பின் விலை $ 200 ஆகும். ஆனால் பல editing மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.

15 Oct 2012

DesktopSnowOK - கணிணியில் குளிர்கால மாய உணர்வினை தரும் Software 2.02


இந்த மென்பொருளானது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சிறிய குளிர்கால மாய உணர்வினை கொடுக்கும் ( டெஸ்க்டாப் ஸ்னோ ) சரியான நிரலாக இருக்கிறது. டெஸ்க்டாப் ஸ்னோ ஓகே மென்பொருளானது உங்கள் விண்டோஸ் டெஸ்க்டாப்பில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பனிப்பொழிவு செதில்களை உருவாக்கும் கனமற்ற கையடக்க விண்டோஸ் நிரல் இருக்கிறது.


 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்