14 Jan 2013

எச்சரிக்கை எச்சரிக்கை கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

computer tips,kingdomofklk


ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும். தற்போது ஜாவாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு மூலம் ஹேக்கர்கள் உங்களை HTML கோப்பு ஒன்றை பார்க்க வைத்து அதன் மூலம் வைரஸ் அனுப்பி உங்கள் கணினியை தாக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த வைரஸ் பாதிப்பை ஜாவாவை உருவாக்கிய ஆரக்கிள் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

3 Jan 2013

புதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி?



மின்னஞ்சல் பயன்படுத்தும் போது நமக்கு அடிக்கடி வரும் பிரச்சினை நமக்கு வரும் ஈமெயில்களை உடனடியாக நம்மால் அறிய முடியாதது. எப்போதும் ஆன்லைனில் இருக்க முடியாத காரணத்தால் இந்த பிரச்சினை நமக்கு வரும். இதே புதிய ஈமெயில் நமக்கு வந்துள்ளது என்பது SMS மூலம் அறிய முடிந்தால்? எப்படி என்று பார்ப்போம். 

3 Nov 2012

பேஸ்புக் ஸ்டேட்டஸ் ட்ரிக் - Trick to Update Your facebook status in blue colour.


facebook கணக்கு வைத்திருக்காதவர்களை இன்று காண்பதென்பது அரிதாகிவிட்டது. அந்தளவுக்கு facebook பாவனை நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.
சரி தலைப்புக்குள்ள வருவம், நாம் எம் எண்ணங்களை அல்லது வேறு பிடித்த ஏதாவது ஒன்றை facebookஇல் statusஆக போடுவோம்.

இந்த facebook statusஇனை சிறிது வித்தியாசமாக போட்டுத்தான் பார்ப்போமே, அதாவது சாதாரணமாக நாம் போடும் status கறுப்பு நிறத்தில் தான் காணப்படும். 
ஆனால் சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் போடுவது எப்படியென்று பார்க்கலாம்.

22 Oct 2012

தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க - HOTSPOT SHIELD



kingdomofklk

உங்க கம்பேனி உங்கள் இம்சை தாங்க முடியாம நீங்க குடியிருக்கிற Facebook, Yahoo Chat, Twitter  போன்றவற்றை தடை செய்துவிடலாம்!
ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம்!  உதாரணமாக் UAE இல்Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது!
வாத்யாரே இதுக்கு இன்னா பண்ண?

7 Oct 2012

இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.



நாம் பலரும் FacebookTwitter போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கிரிக்கட் நடைபெறும் காலங்களில் அதனைப் பார்க்க வசதியில்லாத நேரத்தில் ஆட்ட நிலவரம் பற்றி அறிவதற்காக எவ்வளவு துடிப்புடன் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காய் இலவசமாக எவ்வாறு மொபைலுக்கு ஆட்ட நிலவரத்தைப் பெற்றுக்கொள்வது என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

7 Jan 2012

நீங்க டிரைவரா? அப்போ கண்டிப்பா உங்களுக்குத்தான்...!

  சாலை பாதுகாப்பு வார விழா கடந்த ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. காவல் துறையினர், விபத்தைக் குறைக்கவும், சாலை விதிகளை கடைபிடிக்கவும் பல இடங்களில் வாசக பேனர்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தியும் வருகின்றார்கள்.

5 Jan 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம்.


1. "தகவல் அறியும் உரிமைச் சட்டம்" என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்?

எடுத்துக்காட்டாக,

1. நமது மாவட்ட எம்.பி. அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி எம்.எல்.ஏ. அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

3. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான 'பசுமை வீடுகள் திட்டம்', இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் (முந்தைய ஆட்சியில் 'நமக்கு நாமே திட்டம்'), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

4. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா?

7. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

8. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது?

9. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?

10. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?

இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற: -

திரு. எஸ். இராம கிருட்டிணன், (இ. ஆ. ப, ஓய்வு)

மாநில தலைமை தகவல் ஆணையர்,

காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,

(வானவில் அருகில்) பழைய எண்: 273, புதிய எண்: 378, அண்ணா சாலை, (தபால் பெட்டி எண்: 6405) தேனாம்பேட்டை, சென்னை - 600 018

தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580

மின்னஞ்சல்: mailto: sic@tn.nic.in இணையத்தளம்: http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற: -

ஸ்ரீ சத்யாநந்தா மிஸ்ரா

தலைமை தகவல் ஆணையர்

அறை No.306, இரண்டாம் தளம் ஆகஸ்ட் கிராந்தி பவன்

Bhikaji காமா பிளேஸ் புது தில்லி - 110 066.

தொலைபேசி: - 011 - 26717355

மின்னஞ்சல்: - s.mishra @ nic.in இணையத்தளம்: http://cic.gov.in/

குறிப்பு: மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும்
தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.

சகோதரர்களே! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.

கம்ப்யூட்டரில் தவிர்க்க வேண்டிய தவறுகள்.


தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.

4 Jan 2012

NOTEPAD-ல் உள்ள வித்தைகள்








பொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ! ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.(நீங்கள் மாணவராக இருந்தால் ஒவ்வரு TRICKS படிக்கும் போது கணினியில் அது எப்படி இயங்குகிறது என்று சோதனை செய்து பார்க்க வேண்டும் நண்பர்களே !)

கணினியில் பிரச்சனையா ! CPU வை கழட்டதிங்க !


பொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம்(RAM),வன்தட்டு,மதர்ப்போர்டு போன்றவற்றில் பிரச்சனை வரும்போது சிபியு -வில் அந்த வன்பொருளுக்கு ஏற்றது போல ஒலியை எழுப்பும்.அந்த ஒலியை பீப் சவுண்ட் என்று கூறுவோம்.கணினியில் இருந்து ஒலி வந்த உடன் அந்த ஒலிக்கு உரிய வன்பொருளை கண்டறிந்து பிர்ச்சனைக்கு தீர்வுக் காண்போம்.

1 Dec 2011

போலி ஈமெயில் முகவரிகளை சுலபமாக கண்டறிய - Email Verifier

நண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் ஈமெயில் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர்.  ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஈமெயில் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் கொடுக்கும் முகவரிக்கு மெயில் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்க்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறாக ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம், அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே நம்மிடம் போலியான ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம்.

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்