நாம் Facebook,Twitter போன்ற சமூகவலைத்தளங்கள்,Gmail,Yahoo,Msn போன்ற மின்னஞ்சல் தளங்கள் போன்ற பல சமூக வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கி அதை பார்வைஇடுவோம்.அதை அனைத்தும் வெவ்வேறு விண்டோவில்பார்வையிடவேண்டிஇருக்கும்.இது சிலருக்கு கடுப்பாக இருக்கலாம்.ஆனால் 6 சமூக வலைத்தளங்களை ஒரே இடத்தில் பார்வை இடுவதற்கும் நம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்வதற்கும் நமது Status-ஐ Update செய்து கொள்வதற்கும் உதவுகிறது LiveGo.Com.
இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். இயங்குதளம், மென்பொருள் துறையில் கோலோச்சிய மைக்ரோசாப்ட் இணைய தொழில்நுட்பத்தில் அஜாக்கிரதையாகவே இருந்து வந்தனர். இணையம் மட்டுமே தொழில்நுட்ப உலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திப் போகும் என புரிந்து கொள்ள மைக்ரோசாப்டுக்கு அதிக காலமாகிவிட்டது. இப்போது மைக்ரோசாப்டும் சமூக வலைத்தள போட்டியில் குதிக்கத் தயாராகி வருகிறது.
எப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
சாதாரண புல் முதல் அதிபர் ஒபாமா வரை அனைத்து தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் விக்கியின் புதிய பரிமாணம் தான் Qwiki.அரிய பல தகவல்களையும் வீடியோக்களையும் கொண்டு நம் கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளிக்கும் வகையில் Qwikiஉள்ளது.
அய்யோ! அய்யோ! மச்சி நம்ம பிளாக்கை இழந்துவிட்டால், என்ன செய்வது. இவ்வளவு நாள் கடின உழைப்புலாம் அம்பூட்டு தானா! என்ன! ஓ! பிளாக்கர் அக்கொண்ட் ஏப்படி இழப்பிங்கனூ சொல்லுரிங்களா! ஹாலோ உங்களின் ஜீமெயில் அக்கொண்டை ஏதேனும் ஓர் சூழ்நிலையில் இழந்தால், முடிந்தது மேட்டர் தங்களின் பிளாக்கர் அக்கொண்டையும் நீங்கள் இழந்து தான் ஆக வேண்டும். வடை போச்சே! ம்ம் கவலை வேண்டாம். இதனை நடைபெறமால் செய்ய ஓரே வழி தங்களின் பிளாக்கிற்கு இரண்டுக்கு மேலான AUTHOR/ADMINயை சேர்ப்பதே ஆகும். ஹாலே கூல் கூல், தங்களின் சொந்த பிளாக்கிற்கு வேறு ஒருவரை AUTHOR/ADMINனாக சேர்க்க சொல்லவில்லை.
நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு அனுப்பினோமோ அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத் தகவல்களும் களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.
சமீபத்தில் Facebook தளம் சுயவிவர பக்கத்தின் (Profile Page) தோற்றத்தை மாற்றி டைம்லைன் (Timeline) என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதிகமானோர் அதனை பெற்றிருப்பீர்கள். தற்போது அவ்வசதியை அனைவருக்கும் அமல்படுத்தியுள்ளது. அதனை பற்றி கொஞ்சமாக இங்கு பார்ப்போம்.
சமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் தினந்தோறும் பகிரப்படுகிறது.
நீங்கள் சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
நாம் இணையத்திலிருந்து ஏதாவது பெரிய அளவுள்ள டேட்டாவை தரவிறக்கம் செய்யும்பொழுது நமக்கு கண்டிப்பாக ஒரு தரவிறக்க மென்பொருள் தேவைபடுகிறது. ஆனால் இனி நமது Firefox உலாவியிலேயே ஒரு தரவிறக்க மென்பொருளை
இணைத்தால் நாம் தனியாக எந்த தரவிறக்கமென்பொருளும் கணினியில் நிறுவ வேண்டாம்.
மேலே உள்ள படத்தில் உள்ளது போல உங்களது நெருப்பு நரி தரவிறக்க மென்பொருள் தோன்றும்.
நாம் தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போது கணினி தானாக நின்று போனாலோ வேறு சில காரணங்களால் நின்று போனாலோ விட்ட இடத்திலிருந்து தரவிறக்கத்தை தொடர முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள லின்க்கை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இன்றைய காலத்தில் நமக்கு தேவையான அனைத்து மென் பொருட்களும் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை அனைத்தையும் நமது கணினியில் ஏற்றி வைத்தால் நமது கணினி வேகம் குறையவும வாய்ப்பு உள்ளது இதனால் மிக முக்கியமான மென்பொருட்களை மட்டும் கணினியில் ஏற்றி வைத்துவிட்டு ஆன்லைனில் இலவசமாக உபயோகப்படுத்தும் வகையில் இருக்கும் மென்பொருட்களை இணைய வழியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவ்வகையில் வீடியோ, ஆடியோ, இமேஜ், டாக்குமென்ட் என நமக்கு தேவையானவற்றை நமக்கு வேண்டிய format-க்கு மாற்ற ஆன்லைனில் வசதி உள்ளது. சில தளங்களில் உள்ள மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கணினியில் install செய்தும் உபயோகப்படுத்தும் வகையில் உள்ளது. அவ்வகையான சில தளங்களை இங்கே பார்ப்போம்.
Way2Sms இணையதளம் இந்தியாவிற்குள்ளும் உலகளவிலும் இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுகிறது. இதில் மின்னஞ்சல் சேவையும் தரப்படுகிறது. இங்கேயே ஜிமெயில் மற்றும் யாகூ சாட்டிங் செய்யவும் முடியும். இப்போது புதியதாக விளம்பர சேவை ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு இலவசமாக விநாடியில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் Way2Sms கணக்கு ஒன்றைத் தொடங்கியாக வேண்டும். இது எளிமையான வேலை தான்.Register செய்ய கிளிக் செய்யவும்.
Way2Sms நிறுவனம் இரண்டு வகையான விளம்பர சேவைகளை தற்போது வழங்கி வருகிறது.
ஏராளமான இணைய பிரவுசர்கள் இருந்தாலும் கூகுள் நிறுவனம் வழங்கும் க்ரோம் பிரவுசர் தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்ற வற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் குரோம் பிரவுசராகும். சிறப்பம்சங்கள் இருந்தாலும் உலவியை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.