இந்திய ரயில்வே செயலி மூலமான சேவை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது ரயில்களின் பயண நேரம், வருகை, புறப்படும் நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான செயலியை (ஆப்ஸ்) அறிமுகம் செய்துள்ளது. என்.டி.இ.எஸ் - நேஷனல் டிரைன் என்ரி சிஸ்டம் (NTES ) எனும் இந்தச் செயலி ஆண்ட்ராய்டு சாதனங்களில் செயல்படக்கூடியது. ரயில்வேயின் ஐடி பிரிவான சி.ஆர்.ஐ.எஸ் (CRIS) மூலம் இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் ரயில்கள் பற்றிய தகவல்களை அறிவதுடன் , ஸ்பாட் யுவர் டிரெயின் எனும் அம்சம் மூலம் குறிப்பிட்ட ரயிலின் தற்போதைய நிலையை எளிதாக அறியலாம். ரயில்களின் அட்டவணை, நிலையங்களுக்கு இடையிலான ரயில்கள், ரத்தான மற்றும் மாற்றிவிடப்பட்ட ரயில்கள் பற்றிய விவரங்களை அறியலாம். ஏற்கனவே வின்டோசுக்கு அறிமுகமான நிலையில் இப்போது ஆண்ட்ராய்டில் வந்துள்ளது. ரயில்கள் இயக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறியக்கூடிய வசதியாக இது இருக்கிறது. www.trainenquiry.com இணையதளம் மூலமும் அறியலாம். ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்த: https://play.google.com/store/apps/details?id=cris.icms.ntes&hl=en
0 comments: