ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும். தற்போது ஜாவாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு மூலம் ஹேக்கர்கள் உங்களை HTML கோப்பு ஒன்றை பார்க்க வைத்து அதன் மூலம் வைரஸ் அனுப்பி உங்கள் கணினியை தாக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த வைரஸ் பாதிப்பை ஜாவாவை உருவாக்கிய ஆரக்கிள் நிறுவனம் உறுதி செய்துள்ளது.