15 Nov 2014

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய..?

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய..?



இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள்.

 உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!





டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!

டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

Soft Data Cable

USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.

  

உங்கள் கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்கலாம்


RAM

உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான். கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள்.

மென்பொருள்கள்

புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும். பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

Browser

FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.
Messengers

G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒருinstant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

Startup

கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http:// www.revouninstal ler.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும். Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

Performance

Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizingஎன்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும். Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும்நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

புதுபிக்கவேண்டிய மென்பொருள்கள்

கணினியில் ஒரு firewall, anti virus, anti spyware கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க கொண்டே இருக்கவேண்டும்.

ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus,antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

14 Nov 2014

75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள்


நீங்கள் பயன்படுத்தும் கணினியின் வேகம் வழமையைவிட குறைவாக காணப்படுவதற்கு, அதிகளவான மென்பொருட்களை நிறுவியிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும். அதாவது கணினியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம்.
இதனால் வன்தட்டில்(Hard Disk) இடம் வெகுவாக குறைவடைவதோடு ஒன்றிற்கு மேற்பட்ட மென்பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதானல் பிரதான நினைவகத்தின்(RAM) அளவும் குறைவடைகின்றது. இதனால் உங்கள்  கணினியின் வேகம் குறைவடைய வாய்ப்புள்ளது.
இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மிகவும் உதவியாக உள்ள மென்பொருளே Free File Opener ஆகும். இதில் 75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறக்க முடியும். 25MB அளவுடைய இம்மென்பொருள் மூலம் பின்வரும் கோப்பு வகைகளை திறக்க முடியும்.
Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
ML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)
பதிவிறக்கம் செய்ய http://www.freefileopener.com/

13 Nov 2014

ரயில் சேவைக்கான செயலி


இந்திய ரயில்வே செயலி மூலமான சேவை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது ரயில்களின் பயண நேரம், வருகை, புறப்படும் நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான செயலியை (ஆப்ஸ்) அறிமுகம் செய்துள்ளது. என்.டி.இ.எஸ் - நேஷனல் டிரைன் என்ரி சிஸ்டம் (NTES ) எனும் இந்தச் செயலி ஆண்ட்ராய்டு சாதனங்களில் செயல்படக்கூடியது. ரயில்வேயின் ஐடி பிரிவான சி.ஆர்.ஐ.எஸ் (CRIS) மூலம் இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் ரயில்கள் பற்றிய தகவல்களை அறிவதுடன் , ஸ்பாட் யுவர் டிரெயின் எனும் அம்சம் மூலம் குறிப்பிட்ட ரயிலின் தற்போதைய நிலையை எளிதாக அறியலாம். ரயில்களின் அட்டவணை, நிலையங்களுக்கு இடையிலான ரயில்கள், ரத்தான மற்றும் மாற்றிவிடப்பட்ட ரயில்கள் பற்றிய விவரங்களை அறியலாம். ஏற்கனவே வின்டோசுக்கு அறிமுகமான நிலையில் இப்போது ஆண்ட்ராய்டில் வந்துள்ளது. ரயில்கள் இயக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறியக்கூடிய வசதியாக இது இருக்கிறது. www.trainenquiry.com இணையதளம் மூலமும் அறியலாம். ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்த: https://play.google.com/store/apps/details?id=cris.icms.ntes&hl=en
 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்