10 Nov 2014

உங்கள் கணினியில் உள்ள அனைத்து கோப்புக்கள் தொடர்பான தகவல்களையும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் Glary Disk Explorer இலவச மென்பொருள்




இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியின் வன்தட்டில் சேமிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கோப்புக்களையும் மிகச்சிறிய கோப்புக்களையும் மிக இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடிவதுடன் உங்கள் கணினியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கோப்புறைகளும் எந்த அளவு இடத்தினை பிடித்துள்ளது என்பதனையும் இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும் உங்கள் கணினியின் வன்தடடில் எந்த வகையான கோப்புக்கள் எந்த அளவில் உள்ளது என்பதனை விபரிப்பதற்காக புள்ளி விபரங்களில் அமைந்த வட்ட விளக்கப்படத்தினையும் இது தருகின்றது.

உதாரணத்திற்கு உங்கள் கணனியின் வன்தட்டில் அல்லது வன்தட்டின் ஒரு பாகத்தில் அல்லது வன்தட்டில் உள்ள ஒரு கோப்புறையில் இருக்கக்கூடிய வீடியோ கோப்புக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், மற்றும் ஏனைய கோப்புக்கள் போன்றவற்றினை தனித்தனியாக அறிந்துகொள்ள முடியும்.

இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது?

(கணினியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் இந்த மென்பொருளை மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.)


  • கீழுள்ள இணைப்பு மூலம் இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்க.



  • பின் அதனை திறக்கும் போது குறிப்பிட்ட மென்பொருளுடன் சிறியதொரு சாளரமும் தோன்றும். அதில் உங்கள் கணினி வன்தட்டின் அனைத்து பாகங்களும் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும். 



  • எனவே குறிப்பிட்ட சாளரத்தின் மூலம் நீங்கள் விரும்பும் ஒரு பாகத்தினையோ அல்லது All Local Drivers என்பதனை சுட்டுவதன் மூலம் வன்தட்டு முழுவதையுமோ அல்லது A Folder என்பதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கோப்புறையை மாத்திரமோ தெரிவு செய்து கொள்ள முடியும்.


பின் நீங்கள் தெரிவு செய்த அந்த பாகத்திலோ அல்லது கோப்புறையிலோ இருக்கக் கூடிய அனைத்து கோப்புக்களும்/கோப்புறைகளும் அவைகள் கணினி வன்தட்டில் கொண்டுள்ள இட அளவினையும் மிக இலகுவாக அறிந்துகொள்ளும் வகையில் வட்ட விளக்கப்படத்துடன் பட்டியல் படுத்தப்படும்.

மேலும் நீங்கள் தெரிவு செய்த பாகத்தில் அல்லது கோப்புறையில் மொத்தமாக எத்தனை கோப்புறைகள் உள்ளன எத்தனை கோப்புக்கள் உள்ளன அதில் எந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, எந்த அளவு பயன்படுத்தப்படாமல் உள்ளது என்பவற்றினையும் குறிப்பிட்ட மென்பொருளின் கீழ்பகுதியில் தரப்பட்டுள்ள Bar மூலம் அறிந்துகொள்ளலாம்.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளினை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Glary Disk Explorer

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்