12 Nov 2014

Whatsapp ஐ விட சிறந்த சேவையினை வழங்கும் Telegram சேவை (இணையத்தின் ஊடாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்)

பல்லாண்டு காலமாக SMS எனும் வசதி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அண்மைக்காலமாக Messaging மென்பொருள்களின் பாரிய வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் இந்த குருஞ்செய்தி எனும் சேவை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு அவற்றுக்கு பதிலாக Messaging மென்பொருள்கள் பயன்படுத்தப்படுமோ? எனவும் எண்ணத் தோன்றுகின்றது.




பொதுவாக குறுஞ்செய்திகள் மூலமான தகவல் பரிமாற்று முறையில் வெறும் எண்கள் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்களையே பரிமாறிக்கொள்ள முடிகின்றது இருப்பினும் இந்த Messaging மென்பொருள்கள் மூலமான தகவல் பரிமாற்று முறையில் எண்கள் எழுத்துக்கள் மாத்திரமின்றி புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், ஒலிக்கோப்புகள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றினையும் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகின்றது.


எனவே இது போன்ற வசதிகள் காரணமாக Smart சாதனங்களை பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் SMS எனும் பாரம்பரிய முறையை விட்டு விட்டு இந்த புதிய சேவைகளுக்கு நகரத்துவங்கி உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் இன்று பல்வேறு நிறுவனங்களும் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளன.

இதற்கு சான்று பகரும் வகையில் இந்த சேவையை வழங்குவதில் முதன்மையாக திகழ்ந்த Whatsapp சேவையினை கூட Google நிறுவனத்துடன் போட்டி இட்டு Facebook நிறுவனம் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தனதாக்கிக் கொண்டிருந்ததுடன் Google நிறுவனமும் இது போன்ற புதியதொரு சேவையை வழங்கும் மென்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன.

எது எப்படியோ இன்று அதிகமானவர்களால் Whatsapp மென்பொருளே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சேவையானது நீங்கள் விரும்பும் நபர்களுடன் உங்கள் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், ஒலிக்கோப்புகள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றினையும் பகிர்ந்துகொள்ள வழிவகுக்கின்றது.

இருப்பினும் இதன் மறு புறம் பார்க்கையில் இந்த சேவையை ஒரு வருடத்திற்கு மாத்திரமே இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் அதன் பிறகு ஒவ்வொரு வருடத்திற்கும் கட்டணம் செலுத்தியே பயன்படுத்த வேண்டும்.

எனவே ஒரு வருடத்தின் பின் ஒரு சிலர் இதனை கட்டணம் செலுத்தி பயன்படுத்தினாலும் காலப்போக்கில் இது அதிகமானவர்களால் கைவிடப்பட்டு விடுகின்றது.

எனவே இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இதற்கு ஈடான முற்றிலும் இலவசமான சேவையே Telegram எனும் சேவையாகும்.





  • Whatsapp வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் இந்த சேவை மூலம் பெற்றுக்கொள்ள முடிவதுடன் இதனை எவ்வித விளம்பரத் தொல்லைகளும் இன்றி முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
  • மேலும் Whatsapp ஐ விட வேகமாக செயற்படக்கூடிய இது உங்கள் தகவல்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்குகின்றது.
  • அத்துடன் Whatsapp ஐ போலல்லாது இந்த மென்பொருள் மூலம் 1 GB வரையான வீடியோ கோப்புக்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
  • இதில் தரப்பட்டுள்ள Secret Chat எனும் வசதி மூலம் நீங்கள் விரும்பும் நபர்களுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் உரையாட முடியம் இவ்வாறு நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் எவ்வைகையிலும் Telegram மூலம் சேமிக்கப்படமாட்டாது 
  • மேலும் இது இணைய சேமிப்பகத்தை அடிப்படையாகக் கொண்ட சேவையினை வழங்குகின்றது. இதனால் Telegram மூலம் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களை உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் நிருவகிக்க முடியும் இந்த சேமிப்பாக வசதியானது வரையறை அற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
  • இவைகள் தவிர இதனை iOS, Android, Windows Phone போன்ற சாதனங்களில் மட்டுமல்லாது Windows, Mac, Linux இயங்குதளங்கள் நிறுவப்பட்ட கணினிகளிலும் நேரடியாக இணையத்தினூடாகவும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.



எனவே Whatsapp விட பல விதத்திலும் சிறந்த சேவையை வழங்கும் இந்த மென்பொருளை நீங்களும் உங்கள் சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்புகள் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.











பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்