9 Dec 2012

"பாபர் மஸ்ஜித் தீர்ப்பு" குறித்து பி.ஜே அவர்கள் VHP உடன் நேருக்கு நேர் விவாதம் (Video)- DOWNLOAD செய்யும் வசதியுடன் வெளியிடப்பட்டு உள்ளது.


பி.ஜே,vhp,babar,masjid,babar masjid

கடந்த 6-12-2012 அன்று கேப்டன் நியுஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு VHP உடன் விவாதம் செய்தார்கள். அதன் வீடியோ ஆன்லைன்பிஜே வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.
நமது தளத்தின் வாசகர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அந்த வீடியோ கலை DOWNLOAD செய்யும் வசதியினை ஏற்பாடு செய்து தருகிறோம்.

முழு வீடியோ வையும் டவுன்லோட் செய்ய


Play Without Downloading 

Download To your computer      மொபைல் வீடியோ
ஆடியோ 

பாகங்களாக டவுன்லோட் செய்ய


முதலில் இந்த லிங்க் கிற்கு சென்று 

Free Download Manager - இலவச பதிவிறக்க மேலாளர் மென்பொருள் 3.9.1249

  Software ரை Install செய்து கொள்ளுங்கள்.
அல்லது ஏற்கனவே உங்களிடம் வேறு ஒரு Downloader Software இருந்தால் தொடருங்கள்.

VHP உடன் பாபர் மஸ்ஜித் குறித்து கேப்டன் டிவியில் நடைபெற்ற 

நேரடி விவாதம் பாகம் -1



 DOWNLOAD லிங்க் : 


VHP உடன் பாபர் மஸ்ஜித் குறித்து கேப்டன் டிவியில் நடைபெற்ற 

நேரடி விவாதம் பாகம் -2



DOWNLOAD  லிங்க் : 



VHP உடன் பாபர் மஸ்ஜித் குறித்து கேப்டன் டிவியில் நடைபெற்ற 

நேரடி விவாதம் பாகம் -3



 DOWNLOAD லிங்க் :



VHP உடன் பாபர் மஸ்ஜித் குறித்து கேப்டன் டிவியில் நடைபெற்ற

 நேரடி விவாதம் பாகம் -4



DOWNLOAD லிங்க் : 


பதிவு பயனுள்ள தாக இருந்தா கண்டிப்பா ஷேர் பண்ணுக 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர் பார்கிறேன்

      Delete
  2. இந்த நாட்டை உருவாக்கப் பாடுபட்ட,

    இந்த நாட்டின் உருவாக்கத்துக்காக உயிர் நீத்த

    இஸ்லாமிய சகோதரர்களைத்

    தேசத்துரோகக் கூட்டமாக சித்தரித்து

    ‘சீன்’ போடுவதை

    ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது.
    திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

    இன்று நேற்றல்ல... இஸ்லாமியர்களை தேசவிரோத சக்தியாக சித்தரித்துப் படம் பிடிப்பது இங்கு நீண்டகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    ‘ரோஜா’ படத்தில், தொழுகை நடத்திக் கொண்டே ‘அசைன்மென்ட்’க்கு உத்தரவு கொடுப்பதாக காட்சி இருக்கும்.

    உலகநாயகன் படங்களில் இது உச்சக்கட்டம்.

    ‘ஹே ராம்’ படத்தில், ‘‘நீங்க உங்க நாட்டுக்கே போங்கடா,’’ என்பார்.

    உன்னை போல் ஒருவனில், ‘‘ஒரு பொண்டாட்டி செத்தா என்ன பாய்? அதான், மூணு இருக்கே; அதுவும் மூணாவதுக்கு வயது பதினாறுதான்,’’ என இஸ்லாமியர்களின் சோகத்தையும்கூட ஏகடியம் செய்து வசனம் வைப்பார்.

    அடுத்து இவர் ‘விஸ்வரூபம்’ எடுக்கிற படம் நிஜமாகவே, கதி கலக்குகிறது.

    அந்த சினிமாவின் ‘டிரெய்லர்’ பார்த்த போது, நமது பயம் உண்மையாகி விடுமோ என்ற அச்சம் அதிகமாவதை தவிர்க்க முடியவில்லை.

    ‘‘விஸ்வரூபம் சினிமா இஸ்லாமியர்களுக்கு எதிரானதா?’’ என்று பிரெஸ்மீட்டில் கேள்வி பாய்ந்தபோது, ‘‘நானா...? இஸ்லாமியர்களுக்கு எதிராகவா? யாரைப் பார்த்து இப்படி கேள்வி கேட்கிறீர்கள்?’’ என்று உலகநாயகன் சீறியிருக்கிறார்.
    ‘‘நீங்கள் என்பதால்தான், இந்தக் கேள்வியே எழுகிறது,’’ என்று மீடியாகாரர்கள் யாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் அதில், தப்பில்லை.

    ஆன்மீகத்தில் பழுத்த பழமான சூப்பர் ஸ்டார், படம் முடித்தது போக பாதிநேரம் இமயமலை, பாபா, கயிலாய குகை, ஆன்மீக தவம் என்றுதான் பழியாகக் கிடப்பார். அவர்கூட, மாற்றுச் சமூகங்களை விமர்சனம் செய்து எந்தப்படமும் செய்ததில்லை.

    ‘தீவிரவாதம் பற்றி ஆப்கானிஸ்தானில் படம் எடுக்கும் போது, அங்கிருப்பவர்களை இஸ்லாமியர்களாகத்தானே காட்டமுடியும்?’ என்பது உலகநாயகன் வாதம்.

    தீவிரவாதம் பற்றி படம் எடுக்க ஏன் ஆப்கானிஸ்தான்வரை போகவேண்டும்?.

    இன்றைய தேதிக்கு, மனித நாகரிகங்களை, மரபுகளை, நெறிமுறைகளை... அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு கொத்துக் கொத்தாய் உயிர்களை கொன்று குவித்த, குவிக்கிற உலக மகா தீவிரவாதம், பயங்கரவாதம் நமக்கு மிக அருகே நடந்து கொண்டிருப்பது உலகநாயகன் அறியாததா?

    தீவிரவாதம் பற்றி மிக உண்மையாக படம் எடுக்கிற நேர்மையோ, துணிச்சலோ, ஆண்மையோ அவருக்கு இருந்தால், ஏன் சிங்களத் தீவிரவாதம் குறித்து ஒரு சினிமா எடுக்கக் கூடாது?


    ஒரு பாவமும் அறியாமல் தூங்கிக் கொண்டிருந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியாரும், அவரது பச்சிளம் குழந்தைகளும் ஒரிசாவில் மதவெறியர்களால் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் மறந்திருக்க முடியாது.

    பஜ்ரங்தளப் பாவிகள் நடத்திய அந்தப் படு பயங்கர சம்பவத்துக்காக, "இந்துக்கள் அனைவருமே பழி பாவத்துக்கு அஞ்சாத பாதகர்கள்" என யாரும் அறிக்கை வெளியிடவில்லை;

    சினிமா எடுக்கவில்லை.

    எரித்துக் கொன்றவனை ஒரு மத அடிப்படைவாதியாக, பயங்கரவாதியாக மட்டுமே பார்த்தார்களே தவிர, அவனது மதத்துடன் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை.

    மசூதி இடிப்பிலும் அப்படியே. இடித்தவனின் மதத்தவரை யாரும் விரோதக் கண் கொண்டு பார்க்கவில்லை.

    அப்படி இருக்கையில், இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி நடைமுறை ஏன்?


    அவர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதை சினிமா சகோதரர்கள் இனியாவது நிறுத்திக் கொள்வது, சமூக ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் நல்லது.

    நன்றி : திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்
    ( yes.krishnakumar@yahoo.in)

    கீற்று இதழில்.


    கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது.
    முழு கட்டுரையும் >>> இங்கே <<<<<<<

    ReplyDelete
  3. விஸ்வரூபத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாவிட்டால் 10000 பேருக்கு பிரியாணி- முஸ்லிம் லீக்


    சென்னை: விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இல்லாவிட்டால் 10000 ஏழை சகோதரர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்க தயார் என்று தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

    விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, அப்படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

    இந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த கமல், படத்தை பார்த்த பிறகு மனம் மாறி என்னை சந்தேகப்பட்டதற்கு பிராயசித்தமாக பசித்த பிள்ளைகளுக்கு முஸ்லிம் சகோதரர்கள் பிரியாணி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இதற்கு பதில் அளித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹிர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில்

    கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

    'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார்.

    ஆனால் அத் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தது.

    ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

    ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

    'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/viswaroopam-row-muslim-league-accepts-166035.html

    ReplyDelete
  4. தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர் பார்கிறேன்

    ReplyDelete
  5. டவுன்லோட் செய்து விட்டேன் நன்றி

    ReplyDelete

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்