12 Nov 2014

Whatsapp ஐ விட சிறந்த சேவையினை வழங்கும் Telegram சேவை (இணையத்தின் ஊடாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்)

பல்லாண்டு காலமாக SMS எனும் வசதி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அண்மைக்காலமாக Messaging மென்பொருள்களின் பாரிய வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் இந்த குருஞ்செய்தி எனும் சேவை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு அவற்றுக்கு பதிலாக Messaging மென்பொருள்கள் பயன்படுத்தப்படுமோ? எனவும் எண்ணத் தோன்றுகின்றது.




பொதுவாக குறுஞ்செய்திகள் மூலமான தகவல் பரிமாற்று முறையில் வெறும் எண்கள் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்களையே பரிமாறிக்கொள்ள முடிகின்றது இருப்பினும் இந்த Messaging மென்பொருள்கள் மூலமான தகவல் பரிமாற்று முறையில் எண்கள் எழுத்துக்கள் மாத்திரமின்றி புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், ஒலிக்கோப்புகள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றினையும் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகின்றது.


எனவே இது போன்ற வசதிகள் காரணமாக Smart சாதனங்களை பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் SMS எனும் பாரம்பரிய முறையை விட்டு விட்டு இந்த புதிய சேவைகளுக்கு நகரத்துவங்கி உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் இன்று பல்வேறு நிறுவனங்களும் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளன.

இதற்கு சான்று பகரும் வகையில் இந்த சேவையை வழங்குவதில் முதன்மையாக திகழ்ந்த Whatsapp சேவையினை கூட Google நிறுவனத்துடன் போட்டி இட்டு Facebook நிறுவனம் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தனதாக்கிக் கொண்டிருந்ததுடன் Google நிறுவனமும் இது போன்ற புதியதொரு சேவையை வழங்கும் மென்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன.

எது எப்படியோ இன்று அதிகமானவர்களால் Whatsapp மென்பொருளே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சேவையானது நீங்கள் விரும்பும் நபர்களுடன் உங்கள் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், ஒலிக்கோப்புகள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றினையும் பகிர்ந்துகொள்ள வழிவகுக்கின்றது.

இருப்பினும் இதன் மறு புறம் பார்க்கையில் இந்த சேவையை ஒரு வருடத்திற்கு மாத்திரமே இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் அதன் பிறகு ஒவ்வொரு வருடத்திற்கும் கட்டணம் செலுத்தியே பயன்படுத்த வேண்டும்.

எனவே ஒரு வருடத்தின் பின் ஒரு சிலர் இதனை கட்டணம் செலுத்தி பயன்படுத்தினாலும் காலப்போக்கில் இது அதிகமானவர்களால் கைவிடப்பட்டு விடுகின்றது.

எனவே இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இதற்கு ஈடான முற்றிலும் இலவசமான சேவையே Telegram எனும் சேவையாகும்.





  • Whatsapp வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் இந்த சேவை மூலம் பெற்றுக்கொள்ள முடிவதுடன் இதனை எவ்வித விளம்பரத் தொல்லைகளும் இன்றி முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
  • மேலும் Whatsapp ஐ விட வேகமாக செயற்படக்கூடிய இது உங்கள் தகவல்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்குகின்றது.
  • அத்துடன் Whatsapp ஐ போலல்லாது இந்த மென்பொருள் மூலம் 1 GB வரையான வீடியோ கோப்புக்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
  • இதில் தரப்பட்டுள்ள Secret Chat எனும் வசதி மூலம் நீங்கள் விரும்பும் நபர்களுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் உரையாட முடியம் இவ்வாறு நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் எவ்வைகையிலும் Telegram மூலம் சேமிக்கப்படமாட்டாது 
  • மேலும் இது இணைய சேமிப்பகத்தை அடிப்படையாகக் கொண்ட சேவையினை வழங்குகின்றது. இதனால் Telegram மூலம் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களை உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் நிருவகிக்க முடியும் இந்த சேமிப்பாக வசதியானது வரையறை அற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
  • இவைகள் தவிர இதனை iOS, Android, Windows Phone போன்ற சாதனங்களில் மட்டுமல்லாது Windows, Mac, Linux இயங்குதளங்கள் நிறுவப்பட்ட கணினிகளிலும் நேரடியாக இணையத்தினூடாகவும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.



எனவே Whatsapp விட பல விதத்திலும் சிறந்த சேவையை வழங்கும் இந்த மென்பொருளை நீங்களும் உங்கள் சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்புகள் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.











கணனியின் மிகவேகமான செயற்பாட்டுக்கு உதவுகிறது Privacy Eraser எனும் இலவச மென்பொருள்

உங்கள் கணனி இன்னும் மந்த கதியில் தான் இயங்குகின்றதா?அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Privacy Eraser எனும் இலவச மென்பொருள்.
இந்த மென்பொருளானது ஒரு Windows கணனியின் வேகமான செயற்பாட்டுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் தருகின்றது. 
மென்பொருள்

 




  • எமது கணனியை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது கணனியில் தேங்கும் தேவையற்ற கோப்புக்கள், தற்காலிக கோப்புக்கள், மற்றும் இணைய உலாவிகளில் தேங்கும் Browser cache, Browser cookies, Browser history போன்ற வற்றினை இனங்கண்டு நீக்குவதன் மூலம் குறிப்பிட்ட கணனியின் வேகமான செயற்பாட்டுக்கு உதவுகின்றது.

  • அது மட்டுமல்லாது இந்த மென்பொருளை பயன்படுத்தி கணனியில் இருக்கக் கூடிய உங்கள் தனிப்பட்ட கோப்புக்களை மீளவும் மீட்டெடுக்க முடியாத வகையில் அவற்றினை எமது வன்தட்டில் இருந்து நீக்கிக் கொள்ளவும் முடிகிறது.

  • மேலும் கணனி துவங்கும் போது அதனுடன் இணைந்தாற்போல் சில மென்பொருள்கள் துவங்குவதால் கணனியின் வேகம் குறைகின்றது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் Start Up Manager எனும் வசதியை இந்த மென்பொருள் தருகின்றது. இதன் மூலம் கணனி துவங்கும் போது துவங்கக் கூடிய தேவையற்ற மென்பொருள்களை இனங்கண்டு அவற்றின் செயற்பாட்டினை முடக்கிக்கொள்ள முடியும்.

எமது கணனியில் நிருவப்பட்டிருக்கக் கூடிய மென்பொருள்களை நீக்கிக் கொள்ள நாம் Control Panel இல் இருக்கக் கூடிய Add/Remove Program ஐ பயன்படுத்துவோம் அலாவா?


இதனை பயன்படுத்தி மென்பொருள்களை நீக்கும் போது சில மென்பொருள்களின் கோப்புக்கள் நீக்கப்படாமல் எமது வன்தட்டில் தேங்குவதுடன் Registry இலும் குறைபாடுகள் காணப்படும்.


  • எனவே இது போன்ற குறைபாடுகளை நீக்கி குறிப்பிட்ட மென்பொருளை முற்றாக நீக்கிக் கொள்ளும் வகையில் இந்த மென்பொருளில் Uninstaller எனும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மென்பொருள்களை முற்றாக நீக்கிக் கொள்ள முடியும்.

  • மேலும்இந்த மென்பொருளின் முகப்புப் பக்கத்தில் Scan, Quick Scan, Clean & Restart, Clean & Shutdown போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளது. இதில் Scan என்பதைஒருமுறை சுட்டுவதன் மூலம் எமது கணனியில் இருக்கக் கூடிய அத்தனை குறைபாடுகளும் ஆழமாக அறியப்பட்டு நீக்கப் படுகின்றது.

  • மேலும் இதில் உள்ள Quick Scan என்பதனை சுட்டுவதன் மூலம் கணனியில் காணப்படக்கூடிய முக்கிமான குறைபாடுகளை மாத்திரம் மிக வேகமாக கண்டறிந்து நீக்கிக் கொள்ள முடிகிறது.

  • அத்துடன் Clean & Restart, Clean & Shutdown என்பவைகள் மூலம் எமது கணனியிலுள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்ட பின் கணணியை தானாகவே Shutdown அல்லது Restart செய்து கொள்ளவும் முடியும்.

  • இவைகள் தவிர கணணி துவங்கும் போதே எமது கணனியில் இருக்கக் கூடிய குறைபாடுகளை தானாக கணடறிந்து நீக்கும் படி அமைத்துக் கொள்ளவதற்கான வசதியை இம்மென்பொருள் கொண்டுள்ளதுடன் இன்னும் பல வசதிகளையும் இது தருகின்றது.

சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடியுமான இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ள முடியும்.

நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை வீட்டிலிருந்தவாறே கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.


இணையத்தினை ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட நோக்கங்களில் பயன்படுத்துகின்றனர். இதனை ஏராளமானோர் தவறான கண்கொண்டு பார்த்தாலும்  இணையமானது கற்றல் நடவடிக்கைகளுக்கும் சிறந்ததொரு களமாகவே அமைந்துள்ளது.

e learning

அந்தவகையில் வேகமாக தட்டச்சு செய்ய உங்களை பயிற்றுவிக்கும் முற்றிலும் இலவசமான ஒரு இணையதளம், மற்றும் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பெரிதும் உதவும் பயனுள்ள தளங்கள். போன்ற எமது முன்னைய பதிவுகள் மூலம் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவும் இணைய தளங்கள் பலவற்றை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை வீட்டிலிருந்தவாறே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு உதவுகின்றது trilingualdictionary எனும் இணையதளம்.

trilingualdictionary


  • இந்த தளத்தில் தமிழ் மொழியிலமைந்தஒரு சொல்லை சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கும் சிங்கள மொழியில் அமைந்த ஒரு சொல்லை ஆங்கிலம், தமிழ் மொழிகளுக்கும், ஆங்கிலத்தில் அமைந்த ஒரு சொல்லை தமிழ், சிங்கள மொழிகளுக்கும் என வெவ்வேறாக மொழி பெயர்துக்கொள்ள முடிவதுடன் அந்தந்த மொழிகளை தட்டச்சு செய்து கொள்வதற்கென குறிப்பிட்ட தளத்திலேயே Keyboad உம் தரப்பட்டுள்ளது.

ஆங்கிலம் கற்க இணையதளம்

  • இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய முக்கியமான சொற்களும், வசனங்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன் எமது கற்றல் நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் பொருட்டு குறிப்பிட்ட சொற்களை அல்லது வசனங்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும் தரப்பட்டுள்ளது.

தமிழ் ஆங்கிலம் கற்க இணையதளம்

இந்த தளத்தினை பயன்படுத்திக்கொள்ள எவ்வித கணக்குகளையும் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.


ஆசிரியர்கள், மாணவர்கள் என எந்த ஒரு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய இந்த தளத்திற்கு நீங்களும் பிரவேசிக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


11 Nov 2014

உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் அருமையான மென்பொருள்.

இது ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருளாகும்.

உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? இதனை நிவர்த்தி செய்ய எண்ணுகிறீர்களா? அப்படி எனில் உங்கள் Android சாதனத்தில் இருக்க வேண்டியது Battery Doctor ஆகும். இது உங்கள்  Android சாதனத்திலிருந்து வீணே செலவாகும் சக்தியை சேமித்து நீண்ட நேர உழைப்பை பெற்றுத்தர பெரிதும் உதவுகின்றது. இது 30 மில்லியன் பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ள முற்றிலும் இலவசமான மென்பொருளாகும்.



இது உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க என்ன தான் செய்கின்றது ?

  • இதனை ஒருமுறை இதனை Click செய்வதன் மூலம் உங்களது Android சாதனத்தின் சக்தியை சேமிக்க முடியும். (One-tap power saving)

  • Android சாதனம் இன்னும் எவ்வளவு நேரம் இயக்கத்தில் இருக்குமென்பதனை துல்லியமாக காட்டுகின்றது.

  • உங்களது Android சாதனத்தில் குறிப்பிட்டஒரு செயல்பாடு இயக்கப்படுவதன் காரணமாக எவ்வளவு நேர சக்தி வீண் விரயமாகின்றது என்பதுடன் அதனை முடக்குவதன் மூலம் எவ்வளவு நேர சக்தியை சேமிக்கலாம் என்பதனையும் கணக்குப்போட்டு காட்டுகின்றது.

  • உங்கள் Android சாதனத்தின் சக்தியை எவ்வாறு சேமிக்கலாம் என்று ஆலோசனை வழங்குவதுடன். தேவைக்கேற்ற விதத்தில் சில வசதிகளை செயற்படுத்தியும் தேவையற்ற வசதிகளை முடக்கியும் பயன்படுத்த உதவுகின்றது.

  • அமைதியாக Battery இன்  சக்தியை வீண் விரயம் செய்யும் மென்பொருள்களை கட்டுப்படுத்துகின்றது.(Task Killer)

  • Battery இன்  சக்தியை அதிகம் எடுத்துக்கொள்ளும் மென்பொருள்களை பட்டியல் போட்டு காட்டுகின்றது.

  • குறிப்பிட்ட ஒரு நேரத்தில் Battery இன்  சக்தியை சேமிக்கும் வசதியை தருகின்றது. (Pre-made saving mode along with schedule feature)


மேலும் பல வசதிகளுடன் கட்டண மென்பொருளுக்கு ஈடான வசதிகளை வழங்கும் இந்த முற்றிலும் இலவசமான மென்பொருளை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லுங்கள்.

மென்பொருள்களின் முன்னைய பதிப்புக்களை தரவிறக்கிக்கொள்ள உதவும் இணையதளம்.

கணினி மூலம் எமது வெவ்வேறு கருமங்களை நிறைவேற்றிக்கொள்ள "மென்பொருள்" என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

அந்தவகையில் எமது பல்வேறு செயற்பாடுகளுக்கும் என வெவ்வேறான மென்பொருள்களை எமது கணினியில் நிறுவி பயன்படுத்துவோம் அல்லவா?

Oldversion.com


அவ்வாறான மென்பொருள்கள் அதன் பயனர்களின் தேவை விருப்பங்களுக்கு ஏற்ப காலத்துக்கு காலம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு மென்பொருள்கள் மேம்படுத்தப்படும் போது அதன் முன்னைய பதிப்பில் குறைபாடுகள் இருந்திருந்தால் புதிய பதிப்பில் அது நிவர்த்தி செய்யப்படுவதுடன் பல புதிய வசதிகளும் சேர்க்கப்படும்.

இருப்பினும் சில சந்தர்பங்களில் குறிப்பிட்ட ஒரு மென்பொருளின் புதிய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதி உங்களுக்கு பயனற்றதாகவும் சிரமமானதாகவும் அமையலாம் அல்லது குறிப்பிட்ட மென்பொருளின் புதிய பதிப்பு உங்கள் கணினியில் சாரியாக செயற்படாமல் இருக்கலாம்.


இது போன்ற சந்தர்பங்களில் குறிப்பிட்ட மென்பொருளின் முன்னைய பதிப்பே சிறந்தது என நீங்கள் கருதினால் உங்களுக்கு உதவுகின்றது oldversion எனும் இணையதளம்.

இந்த தளத்தில் Ccleaner, Glary Utilities, Mozilla Firefox, Google Chrome, Nero, Photoscape, Skype, Winamp, AVG, Avast உட்பட 650 இற்கும் மேற்பட்ட மென்பொருள்கள் பட்டியல் படுத்தப்பட்டிருப்பதுடன் மொத்தமாக அவற்றின் 17,484 பதிப்புக்கள் தரப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Search Bar மூலம் உங்களுக்குத் தேவையான மென்பொருளினை தட்டச்சு செய்வதன் மூலம் தேடிப்பெற முடிவதுடன் இந்த தளத்தின் முகப்புப் பக்கத்தில் Utilities, Securit, Office, Networking, Multimedia, Internet, Graphics, FTP, File Sharing, Drivers, Development, Communication என பலவேறு தலைப்புக்களின் கீழும் மென்பொருள்கள் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை எளிதாகவும் விரைவாகவும் தேடிப்பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த தளத்தில் நீங்கள் ஒரு மென்பொருளை தெரிவு செய்த பின் அதன் அடுத்த பக்கத்தில் குறிப்பிட்ட மென்பொருளின் மிக அண்மைய பதிப்பும் அதன் ஆரம்ப பதிப்பும் தரப்படும். மேலும் அதற்குக் கீழ் அவற்றுக்கு இடைப்பட்ட பதிப்புக்கள் பட்டியல் படுத்தப்படுகின்றது. பின் அவற்றுள் உங்களுக்குத் தேவையான பதிப்பை தெரிவு செய்து தரவிறக்கிக்கொள்ள முடியும்.

இந்த தளத்தில் விளம்பரமும் காட்சிப்படுத்தப்படுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட பல Download Button ஐ அவதானிக்க வாய்ப்புண்டு எனவே படத்தில் அம்புக்குறியால் கட்டப்பட்டிருப்பதே சரியானது  என்பதை கருத்தில் கொள்ளவும்.




நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்