12 Apr 2012

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்


   




 சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் 

முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் 

கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது 

Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் 
கப்பலேற்றுகிறது.


தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.


Dailymotion













Yahoo















மேலே உள்ளது நண்பர்கள்  பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் 
பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். 
இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்,

















எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். 
அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். 
மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள்.





This app may post on your behalf, including videos you watched, films you watched and more.
அதாவது  நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் 
இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். 
இதன் மூலம் Spamசெய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு  க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். 
அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் 
செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் 
நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.

இதனை  தவிர்ப்பது எப்படி?

இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற 
சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். 
தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற 
Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் 
என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.

அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, 
இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் 
அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.











மேலே உள்ள DailymotionYahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து 
அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது 
சிறந்தது.


என் பரிந்துரை: எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை 
முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.


சிறு வேண்டுகோள்: இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை 
என்பதால் தாங்கள் பேஸ்புக்கில் இதனை பகிர்ந்தால் பலர் 
இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்