22 May 2012

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?:


நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.



முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் 





 Right Click "My Computer"
-->Manage
--> Disk Management
--> Right Click your Pen drive
--> "Change Drive Letter And Paths"
Select ஆகி உள்ள letter ஐ  remove செய்யவும்.



இப்போது அதே இடத்தில உங்கள் pen drive மீது ரைட் கிளிக் செய்து format கொடுக்கவும். 
இப்போது Format ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen drive my computer இல் தெரியாது.

இந்த முறையில் format ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் அந்த pen drive ஐ format செய்யாது. வேறு கம்ப்யூட்டர் இல் முயற்சி செய்யவும்.

எப்படி pen drive ஐ பாதுகாப்பது??

1 . இன்று எல்லா pen drive களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )

2 . Browsing Center களில் பயன்படுத்த வேண்டாம்.

3 .  மூச்சுக்கு முன்னூறு முறை Format அடிக்காதீர்கள்.  தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.

4 . Pen drive வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format செய்யலாம்.

5 . டெல்லியில் Electronic பஜாரில் மட்டும் pen drive ஐ வாங்க வேண்டாம்.

6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.

7 . Pen drive சொருகியவுடன் ஸ்கேன் செய்ய சிறந்த சாப்ட்வேர் 
USB-Disk-Security

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

  1. I have 2 pen drive with virus but after seeing your idea I hope I can format and remove my virus easily. Very Useful information.

    ReplyDelete

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்