நண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் ஈமெயில் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஈமெயில் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் கொடுக்கும் முகவரிக்கு மெயில் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்க்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறாக ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம், அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே நம்மிடம் போலியான ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம்.
இது போன்ற நேரத்தில் அந்த ஈமெயில் முகவரி சரியானதா இல்லை வேலைசெய்கிறதா, செயல் இழந்து விட்டதா என சுலபமாக கண்டறிய நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
இது போன்ற நேரத்தில் அந்த ஈமெயில் முகவரி சரியானதா இல்லை வேலைசெய்கிறதா, செயல் இழந்து விட்டதா என சுலபமாக கண்டறிய நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
- இதனை அறிந்து கொள்ள நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு எதவும் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள காலி கட்டத்தில் உங்கள் நீங்கள் பரிசோதிக்க வேண்டிய ஈமெயில் முகவரியை கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும்.
போலியானதாக இருந்தால்
- இவற்றை வைத்து தெரிந்து கொள்ளலாம் ஈமெயில் முகவரிகள் உண்மையானதா இல்லை போலியானதா என்று.
0 comments: