22 May 2012

உங்கள் கணினியை சுத்தம் செய்ய Ccleaner Latest version 2.35.1223



கணினி உபயோகிக்கும் பெரும்பாலானவர்களில் நம் கணினியை சுத்தம் செய்ய Ccleaner உபயோகித்து கொண்டிருக்கும். இது நம் கம்புட்டரில் உள்ள தேவையற்ற பைல்களையும் குப்பை தொட்டியில் உள்ள பைல்களையும் நீக்க பயன்படுகிறது. இணையத்தில் எவ்வளவோ மென்பொருட்கள் இருந்தாலும் நாம் ஏன் இந்த Ccleaner பயன் படுத்துகிறோம். அதற்காக நாம் அனைவரும் உபயோகிக்க விண்டும் என்று கீழே பார்ப்போம்.





மென்பொருளின் பயன்கள் 
  • 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள் உபயோகிக்கும் மென்பொருள்.
  • சிறிய அளவுள்ள மென்பொருள் (3.3mb)
  • இது ஒரு இலவச மென்பொருள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
  • இதை தரவிறக்க நீங்கள் அந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை.
  • இதை Install செய்வதற்கும் அதிக இடம் தேவையில்லை.
  • சுலபமாக கையாளலாம்.
  • இதிலேயே Registry சுத்தம் செய்யும் வசதியும் உள்ளது.
  • சரியாக நமக்கு தேவையில்லாத பைல்களை தேடி அழிக்கும்.
  • அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் நம் கணினியை சுத்தம் செய்து விடலாம்.

    கீழே உள்ள Download லிங்கை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

    • தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள்.
    • இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.

    • இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும்.
    • இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும்.
    • உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
    • இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

    பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

    0 comments:

     

    ஒரு like பண்ணுங்க

    பயனுள்ள இனையதளங்கள்