13 Feb 2012

Facebook Timeline ஐப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

சமீபத்தில் Facebook தளம் சுயவிவர பக்கத்தின் (Profile Page) தோற்றத்தை மாற்றி டைம்லைன் (Timeline) என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதிகமானோர் அதனை பெற்றிருப்பீர்கள். தற்போது அவ்வசதியை அனைவருக்கும் அமல்படுத்தியுள்ளது. அதனை பற்றி கொஞ்சமாக இங்கு பார்ப்போம்.



புதிய பேஸ்புக் டைம்லைன் பெற: பேஸ்புக்கில் உள்நுழைந்தவுடன் உங்களுக்கு பேஸ்புக் டைம்லைன் பற்றிய அறிவிப்பு வரும். அப்படி வரவில்லையெனில் www.facebook.com/about/timelineஎன்ற முகவரிக்கு செல்லவும்.
அங்கு Get Timeline என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
இந்த  புதிய டைம்லைனில் உள்ள சில வசதிகளை மட்டும் பார்ப்போம்.
Cover Photo:
பேஸ்புக் டைம்லைன் (அல்லது ப்ரொபைல்) பக்கத்தில் மேலே பெரிய படத்தை இணைக்கும் வசதி உள்ளது. இது Cover எனப்படும். Add a Cover என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு விருப்பமான படத்தை இணைக்கலாம்.
கவர் பட இணைத்தபின் உள்ள தோற்றம்.








Hide from Timeline:
Timeline பகுதியில் தெரிபவற்றில் ஏதாவதை அந்த பக்கத்தில் தெரியக் கூடாது என்று நினைத்தால், அதன மேலே மவுஸை கொண்டு போனால் வலதுபுறம் பென்சில் ஐகான் இருக்கும். அதனை க்ளிக் செய்து, Hide from Timeline என்பதை க்ளிக் செய்தால், அது டைம்லைன் பகுதியில் தெரியாது.
Activity Log:
பேஸ்புக்கில் நம்முடைய செயல்பாடுகளை இந்த Activity Log பகுதியில் காணலாம். இங்கு உள்ளது நமக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.
மற்ற வசதிகளை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும்.
கவனிக்க:
சமூக வலையமைப்பு தளங்களால் நன்மைகள் ஓரளவு இருந்தாலும், இங்கு நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் இது போன்ற தளங்களில் தங்களின் புகைப்படங்கள், சுயவிவரங்களை பகிரும் விடயத்தில் கவனம் தேவை.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்