20 Feb 2012

ரகசியத் தகவல்களை அனுப்புவது எப்படி?


நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு அனுப்பினோமோ அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத் தகவல்களும் களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.



இந்த வசதியை https://oneshar.es/ என்னும் தளம் நமக்கு தருகிறது.


அங்கு சென்று Create One New என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு உங்கள் ரகசிய செய்திகளை கொடுத்து Create Link என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு உங்களுக்கென்று ஒரு சுட்டி (URL) கிடைக்கும். அதில் நீங்கள் க்ளிக் செய்துவிடாதீர்கள். யாருக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ? அவர்களுக்கு அந்த சுட்டியை அனுப்புங்கள். 


அந்த சுட்டியை அவர்கள் க்ளிக் செய்தவுடன் அவர்களுக்கு செய்தி தெரியும். இதை ஒருமுறை மட்டுமே படிக்க முடியும். மீண்டும் அந்த சுட்டியை க்ளிக் செய்தால் அந்த செய்தி இருக்காது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்