கம்ப்யூட்டரில் சேரும் குக்கீஸ், கேஷ் மெமரி பைல்கள், பிரவுசரின் தற்காலிக பைல்கள், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை அவ்வப்போது நீக்க பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அடிக்கடி இது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் டிசம்பர் இறுதியில் இதன் புதிய பதிப்பான சிகிளீனர் 3.14.1616 வெளியாகியுள்ளது.
இதில் கீழ்க்காணும் புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்டார்ட் அப் டூலின் மேம்பாடான பயன்பாடு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புரோகிராமிற்கான ஆட் ஆன் தொகுப்பு சரிப்படுத்துதல், குக்கீஸ் எக்ஸ்போர்ட் மற்றும் இம்போர்ட் வசதி, குரோம் பிரவுசருக்கான கூடுதல் கிளீனிங் வசதி, ரியல் பிளேயர் 15 மற்றும் விண்டோஸ் மீடியா சென்டருக்கான கூடுதல் வசதிகள் மற்றும் விண் ஆர்.ஏ.ஆர்., விண்டோஸ் லாக் பைல்கள், யு டாரண்ட் மற்றும் அக்ரோபட் டிஸ்டில்லர் 10 ஆகிவற்றைக் கிளீன் செய்வதிலும் புதிய வசதி என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டதாக இந்த புதிய சிகிளீனர் தொகுப்பு கிடைக்கிறது.
http://www.piriform.net என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
0 comments: