இணையத்தில் நாம் ஒரு தகவலை தேடி செல்லும் போது பல கோப்புகள் வேர்ட், எக்சல், பவர் பாயின்ட் போர்மட்டுகளில் இருக்கும். அவ்வாறு உள்ள கோப்புகள் படங்களுடன் மட்டுமே இருக்கும்.
இவற்றை தனியாக பிரித்தெடுப்பதற்கு Image Extraction Wizard என்னும் மென்பொருள் உதவி புரிகிறது. இதன் மூலம் படங்களை தனியாக பிரித்தெடுக்க முடியும்.
உதாரணமாக நாம் ஒரு வேர்ட் டாக்குமெண்டை எடுத்துக் கொள்வோம், அதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களை மட்டும் தனியே பிரித்தெடுக்க வேண்டுமெனில் தனித்தனி படங்களாக தெரிவு செய்து மட்டுமே சேமிக்க முடியும்.
அதற்கு பதிலாக ஒட்டுமொத்தாக அனைத்து படங்களையும் ஒரே சமயத்தில் பிரித்தெடுக்கவும் முடியும். அதற்கு உதவும் மென்பொருள் தான் இந்த Image Extraction Wizard.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்துவிட்டு பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
பின் குறிப்பிட்ட ஆப்பிஸ் கோப்பினை தெரிவு செய்து, அடுத்து எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதையும் தெரிவு செய்து கொண்டு, அடுத்து Next என்னும் பொத்தானை அழுத்தவும்.
நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்த படங்கள் சேமிக்கப்பட்டு விடும். இதே போல் அனைத்து விதமான ஆப்பிஸ் கோப்புகளில் உள்ள படங்களையும் தனியே பிரித்தெடுத்துக் கொள்ள முடியும்.
0 comments: