
1998-ல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச விண்வெளி மையத்தின் முதல் பகுதி
பூமியிலிருந்து 300 கிமீ தூரத்தில் விண்ணில் நிலை கொண்டிருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம். 1998-ம் ஆண்டு இந்த நிலையத்தின் முதல் பகுதி பூமியின் தாழ் அச்சுப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.
சல்யூட், அல்மாஸ், ஸ்கைலாப், மிர் என இதற்கு முன் எட்டு விண்வெளி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் ஸ்கைலாப் கொடுத்த அதிர்ச்சி எண்பதுகளில் பள்ளி சென்றவர்களுக்கு புரிந்திருக்கும்.
ரஷ்யா, அமெரிக்கா ஆகிய வல்லரசுகள் கூட்டாக உருவாக்கிய மையம் இது. இங்கு நிரந்தரமாக விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள்.
இந்த மையத்தில் தங்கியபடி தங்களின் அடுத்த விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர் ரஷ்ய வீரர்கள். இந்த மையத்துக்கு ஓப்செக் (OPSEK) என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கெனவே ரஷ்யாவின் மிர் விண்வெளி மையம் 12 ஆண்டுகள் பணியில் இருந்தது.
இப்போது சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து நிலவுக்கும், செவ்வாய், சனி கிரகங்களுக்கும் புதிய விண்கலங்களை அனுப்பத் திட்டமிட்டு வருகின்றனர்.

அடர்த்தியான மேகங்களைக் கடந்து…

டிசம்பர் 4, 1998… எண்டெவரில் பயணித்த விண்வெளி நிலையப் பகுதி…

விண்வெளி மையத்துக்குப் புறப்படும் எண்டெவர்…

அடுத்த ஓடம் அட்லாண்டிஸ்… ஆகாயத்தில் ஒரு அற்புதக் காட்சி!

விண்வெளி மையம்… பின்னணியில் பூமி!

சர்வதேச விண்வெளி மையத்தின் டெஸ்டினி லேபில் விண்வெளி வீரர்கள்…

2004- மூன்று வீரர்களுடன் விண்வெளி மையத்துக்குப பைக்கானூரிலிருந்து புறப்படும் சோயூஸ் விண்கலம்…

விண்வெளி மையப் பணிகள் முழுமையடைந்த பிறகு எடுக்கப்பட்ட முதல் படம்…

2007-ல் புதிய சோலார் பேனல்கள் அமைக்கப்பட்ட பிறகு…

2008-ல் புதிதாக அமைக்கப்பட்ட கிபோ லேப் ஜன்னலிலிருந்து பூமியைப் பார்க்கும் வீராங்கனை…

116,000 கிலோவை சமாளிக்கும் திறன் கொண்ட Canadarm2 சாதனத்தில் விண்வெளி வீரர் ராபின்சன்…

SuitSat… தானாகவே சாட்டிலைட்டாக மாறும் வசதி கொண்ட ஸ்பேஸ் சூட்டில், விண்வெளியில் ஒரு விஞ்ஞானி!

சர்வதேச விண்வெளி நிலையம் நியூஸிலாந்துக்கு அருகே வந்தபோது…

முழுமையான விண்வெளி ஆய்வு மையத் தோற்றம்!
-படங்கள: நாசா
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
0 comments: