1 Oct 2012

CCleaner Slim - தேவையற்ற நிரல்களை நீக்கும் மென்பொருள் 3.23.1823


சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
ஏற்படுத்துவதுடன், விண்டோஸ் இயக்கத்தினையும் வேகமாகச் செயல்பட வைக்க நாம் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம். இதன் இன்னொரு சிறப்பு இதன் இயக்க வேகம் தான். மிக வேகமாக இயங்குவதுடன், இதில் எந்த விதமான ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் இருப்பதில்லை.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், கூகுள் குரோம், ஆப்பரா, சபாரி, விண்டோஸ் ரீசைக்கிள் பின், ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் லிஸ்ட், தற்காலிக பைல்கள், லாக் பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி ஆகியவற்றை இது சுத்தப்படுத்துகிறது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்