எவ்வளவுதான் Antivirus மென்பொருட்கள் கணினியில் வைரஸ் ப்ரோகிராம் களை தேடி தேடி அழித்தாலும் வைரஸ்களின் தொல்லை தீர்ந்தபாடில்லை. சாதாரணமாக பென் டிரைவ், சிடிக்கள் மூலம் பரவும் வைரஸ்களை விட இணையம் மூலம் பரவும் வைரஸ்/ Malware கள் ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன. Malware நிறைந்த websites களை பார்வையிட்டாலோ அல்லது Browser Toolbar களை கணினியில் Install செய்வதலோ இந்த Malware கள் கணினிக்குள் நுழைகின்றன. Antivirus மென்பொருட்களில் இத்தகைய Malware/ வைரஸ்களை கண்டறிவதற்கான Tools கள் இணைந்து வந்தாலும் அவற்றால் ஓரளவிற்கு மேல் இவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை.
- DNS Settings ஐ அடிக்கடி சரிபார்க்கவேண்டும்
- Local Area Connection Settings ஐ சரிபார்க்கவேண்டும்
- Windows Host File இல் மாற்றம் இருக்கிறதா என கவனிக்கவேண்டும்
- Internet Explorer, Firefox மற்றும் Chrome போன்றவற்றில் இருக்கும் தேவையற்ற Add-Ons களை நீக்கிவிடுங்கள்
- Malware இனை தடுப்பதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருட்களின் உதவியுடன் அடிக்கடி கணினியை Scan பண்ணுங்கள்
- Online Antivirus Scanner களை உபயோகியுங்கள்
- TDSSKiller Tool ஐ உபயோகியுங்கள். தரவிறக்க
- Temporary Files, Browser Empty Cache போன்றவற்றை நீக்கிவிடுங்கள்.
Malware கள் DNS (Domain Name System) Settings ஐ மாற்றிவிட சந்தர்ப்பங்கள் உள்ளன. இவ்வாறு மாற்றப்பட்டால் நீங்கள் உள்ளிடும் இணைய முகவரி வேறு ஒரு தளத்திற்கு திசை திருப்பப்படுகிறது. உதாரணமாக நீங்கள் www.google.com என உள்ளிட்டால் கூகிள் இற்கு செல்லாமல் வேறு ஒரு தேவையற்ற தளத்திற்கு செல்லும்.
*இதை சரி செய்ய உங்கள் கணினியில் Control Panel செல்லுங்கள் (Start > Control Panel)
*அங்கு Network and Sharing Center என்பதை கிளிக் செய்யுங்கள்.
* அடுத்து வரும் விண்டோவில் Properties என்பதை கிளிக் செய்து அதில் Internet Protocol (TCP/IP) என்பதை Double கிளிக் செய்யுங்கள்.
* அங்கு Obtain DNS server address automatically என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துங்கள். மாறாக Use the following DNS server address என்பது தெரிவுசெய்யப்பட்டிருந்தால் உங்கள் கணினி Malware இனால் தாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதை நீக்கிவிட்டு Obtain DNS server address automatically என்பதை தெரிவு செய்யுங்கள்
Local Area Connection Settings
இங்கேயும் மேலே கூறப்பட்டது போன்று Proxy மாற்றப்பட்டு நீங்கள் உள்ளிடும் இணையத்தளம் அல்லாமல் வேறோர் தளத்திற்கு உங்களை எடுத்துச்செல்கிறது. ஆகவே Proxy Disable செய்யப்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் Proxy பாவிக்கிறீர்கள் என்றால் IP Address மற்றும் Post Number ஆகியவற்றை சரிபாருங்கள்
* இதனை சரி செய்ய internet explorer ஐ Open செய்யுங்கள். அதில் Tools - Internet options - Connection என்ற வழியே சென்று LAN Settings என்பதை கிளிக் பண்ணுங்கள்.
* அங்கு Proxy server என்பது தெரிவு செய்யப்பட்டிருந்தால் நீக்கிவிடுங்கள்.
* Firefox உலாவி என்றால் Tools > Options>Advanced’ > ‘Network’ tab, > ‘Settings’ என்ற வழியே சென்று No Proxy என்ற Radio button ஐ தெரிவுசெய்துவிட்டு Ok பட்டனை கிளிக் பண்ணுங்கள்.
Windows Host File
சில Malware கள் Windows Host File ஐ தங்கள் தேவைக்கேற்ற விதத்தில் மாற்றம் செய்துவிடும்.
* Drive C > WINDOWS > system32 > drivers > etc என்ற வழியே செல்லுங்கள். அங்கு "Host" என்னும் பெயரில் ஒரு File இருக்கும். அதை Notepad உடன் திறவுங்கள் ( Right Click on "Host" & Click Open With Notepad)
* மாற்றம் செய்யப்படாத "Host" File எனில் அங்கு IP address 127.0.0.1 localhost என்பதை தவிர வேறு எதுவும் இருக்காது. அப்படி வேறு ஏதாவது தரவுகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு சேமித்துக்கொள்ளுங்கள்.
Malware Removal Programs
Malware Removal Programs இன் மூலம் அடிக்கடி உங்கள் கணினியை Scan செய்துகொள்ளுங்கள்.
சில Malware Removal Programs
* Spyware Doctor
* Malwarebytes' Anti-Malware
இவை இரண்டும் கட்டண மென்பொருட்கள். ஆனால் முழு வெர்சனும் 30 நாள் Trial Version ஆக தரவிறக்கலாம்.
Online Malware Scanner
Malware களின் உச்சக்கட்ட தாக்குதலாக, அன்ரிவைரஸ் மென்பொருட்களை தாக்கி அவற்றை சரிவர இயங்கமுடியாமல் தடுத்துவிடும். இதன்போது கணினியை எமது அன்ரிவைரஸ் மென்பொருட்கள் மூலம் Scan பண்ணமுடியாது. இந்த வேளைகளில் Online Scanner களை உபயோகிக்கலாம்.
சில இலவச Online Scanner
Bitdefender online scanner
Kaspersky virus scanner
Free eset online scanner
கணினியில் உள்ள Temporary Files மற்றும் Empty Browser Cache என்பவற்றை நீக்கிவிடுங்கள்.
* இதற்கு விண்டோஸில் உள்ள Run ஐ Open பண்ணுங்கள். (Start > Run அல்லது கீபோர்டில் Windows கீயுடன் R கீயை அழுத்துங்கள்)
* அதில் %temp% என ரைப் செய்து எண்டர் பண்ணுங்கள். இப்போது Temporary Files அடங்கிய Folder Open ஆகும். அதில் உள்ள Files அனைத்தையும் அழித்துவிடுங்கள். அல்லது இதற்கென்று உள்ள பிரத்தியேகமான மென்பொருட்களை உபயோகித்து நீக்கிக்கொள்ளுங்கள்
CCleaner
ATF Cleaner

பதிவு பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்... நன்றி
பகிர்தமைக்கு நன்றி
ReplyDeleteஅருமையான விஷயங்கள் நன்றி
ReplyDelete