30 Sept 2012

இந்திய ரூபாயினைக் கணிணியில் உள்ளிடுவது எப்படி?


 நமது இந்திய ரூபாயின் குறியீட்டைப் பற்றி அறிந்து கொள்வோமா? 



இந்திய அரசு 15 ஜூலை 2010 அன்று தனது ரூபாய் பண மதிப்பைக் குறிப்பதற்கு என தனியே ஒரு சிறப்பு குறியீட்டைக் கொண்டு வந்தது.இதன் மூலம்ரூபாய் மதிப்பைப் பயன்படுத்தும் பிற நாடுகளிடம்(பாகிஸ்தான்இலங்கைநேபாளம்இருந்து தனது மதிப்பை வேறுபடுத்திக் காட்டியது.


கணிணிகளில் இந்திய ரூபாய்:

விண்டோஸ் (Windows Vista/ Windows 7) :

தற்போது  யூனிக்கோடு எழுத்துருவில் (Unicode-6) இந்திய ரூபாய் நாணயம் இடம் பெற்றுள்ளது. எனவே, எல்லா எழுத்துருக்களிலும் (Font) ரூபாய் வடிவத்தை எழுதலாம். 
நிறுவுவதற்கு:
மைக்ரோசாப்ட் ஆதரவு பக்கம் சென்று, தகுந்த கோப்பைத் தரவிறக்கிக் நிறுவிக் கொள்ளுங்கள். 
எழுதுவதற்கு:
கீழ்காணும் வரிசையினை அடித்தால், இந்திய ரூபாய் வடிவம் கிடைக்கும்:
20B9 + Alt + x  

விண்டோஸ் XP:
நிறுவுவதற்கு:
 கொஞ்சம் பழைய வழி தான்..
  • முதலில், Foradian தளம்  சென்று,கோப்பைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • கோப்பினைப் பிரித்து (Extract), உள்ளிருக்கும் எழுத்துருவினை (Font) நிறுவுங்கள்.
எழுதுவதற்கு:
  • எழுத வேண்டிய இடத்தில், Rupee Foradian என்கிற எழுத்துருவினைத் தேர்ந்தெடுங்கள்.
  • தட்டச்சுப் பலகையில் இருக்கும் ` என்கிற பொத்தானை அழுத்துங்கள்.
     

லினக்ஸ்: 
indian ruppee
இந்திய ரூபாய் குறியீட்டு மாற்றத்தை முதன்முதலில் கணிணி பயன்பாட்டில் கொண்டு வந்தது உபுண்டு இயங்குதளம் தான்(விண்டோஸ் எல்லாம் பின்னால் தான்!!). உபுண்டு தனது 10.10பதிப்பில் இந்த குறியீட்டைச் சேர்த்துக் கொண்டதுபின்னாளில்,பெடோராவும் தனது 15 ஆம் பதிப்பில் ரூபாய் குறியீட்டைச் சேர்த்து கொண்டது.

ரூபாய் குறியீட்டை லினக்ஸ் இயங்குதளங்களில் எப்படி உள்ளிடுவது?
விண்டோஸ் இயங்குதளம் போல இதற்கென தனியே ஒரு எழுத்துருவினை நீங்கள் நிறுவ வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயேமிக எளிதாக இதைச் செய்து முடிக்கலாம்!!
  • கணிணி அமைப்புகள் (System Settings) மூலம் விசைப்பலகை இட அமைப்புகளுக்குச் (Keyboard Layout) செல்லுங்கள் .
  • அங்கு இருக்கும் Options (தேர்வுகள்என்பதனைச் சொடுக்குங்கள்
  • "Adding currency signs to certain keys" என்பதில், "Rupee on 4" என்பதை தேர்வு செய்யுங்கள்
  • Key to choose 3rd level” என்பதில்உங்களுக்கு தகுந்த விசையைத் தேர்வு செய்யுங்கள். (.தா: Right Alt)
  • அனைத்தையும் சேமியுங்கள்

அவ்வளவு தான்!! இனி நீங்கள் உங்கள் விருப்ப விசையை அழுத்தி"4” ஐ (நான் கூறிய உதாரணத்தில் Right Alt + 4) அழுத்தினால் அந்த இடத்தில் ரூபாயின் குறியீடு வந்துவிடும்.

பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் மதிப்பான கருத்தை தெரிவியுங்கள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்