.
2ஜி சேவை கொண்ட சிம் கார்டில் எப்படி 3ஜி நெட்வொர்க் சேவையை பெறலாம்? இந்த கேள்விக்கு இங்கே எளிமையான சில வழிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பரவலாக அனைவரது தொலை தொடர்பு சேவையிலும் 3ஜி நெட்வொர்க் வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 3ஜி சேவையை பயன்படுத்துவதற்கு, நிறைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதிருக்கும் என்பதற்காக பல பேர் இந்த சேவையை ஏக்டிவேட் செய்யாமலேயே இருக்கின்றனர். இதை ஏக்டிவேட் செய்வது மிகவும் சுலபம்.
டோக்கோமோ:
டோக்கோமோ தொலை தொடர்பு சேவையில் 3ஜி நெட்வொர்க் வசதியை பெற வேண்டும் என்றால் அதற்கு இங்கே ஒரு எளிய வழி. ஏசிடி3ஜி (ACT3G) அல்லது 3ஜிலைஃப் (3GLIFE) என்று டைப் செய்து 53333 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். எஸ்எம்எஸ் அனுப்பிய உடன் உங்கள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் கிடைக்கும். அதன் பிறகு உங்கள் மொபைலில் 3ஜி சேவையை பெற யூஎம்டிஎஸ் மோடை (mode) தேர்வு செய்து கொண்டால் போதும்.
வோடாஃபோன்:
ஒவ்வொரு தொலை தொடர்பு சேவைக்கும் ஒவ்வொரு நம்பர் வழங்கப்பட்டிருக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டியது மட்டும் தான். வோடாஃபோன் தொலை தொடர்பு சேவையினை பெற்ற வாடிக்கையாளர்களாக இருந்தால், ஏசிடி3ஜி (ACT3G) என டைப் செய்து 111 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ்
செய்ய வேண்டும். நமது நம்பருக்கு மெஸேஜ் வரும் வரை காத்திருக்க வேண்டும். மெஸேஜ் வந்த பிறகு முதலில் கூறியது போல மொபைலில் யூஎம்டிஎஸ் மோடை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இது போன்ற வழிமுறைகளில் 3ஜி சேவையை எளிதாக பெறலாம்.
ஏர்டெல்:
ஏர்டெல் தொலை தொடர்பு சேவை கொண்ட எண்ணிலிருந்து 3ஜி (3G) என்று டைப் செய்ய வேண்டும். 121 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். அதன் பின் உறுதி செய்து கொள்வதற்காக ஏர்டெல் தொலை தொடர்பு சேவையிடமிருந்து நமது மொபைல் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வரும். பிறகு யூஎம்டிஎஸ் மோட் ஆப்ஷனை செலக்ட் செய்வது அவசியம்.
ஐடியா:
ஐடியா தொலை தொடர்பு சேவையில் உள்ள 2ஜி சிம் கார்டில் 3ஜி சேவையை பெற வேண்டும் என்றால், ஏசிடி3ஜி (ACT3G) அல்லது 3ஜி என்று டைப் செய்து 54777 எனும் எண்ணிற்கு மெசேஜ் செய்தால் போதும். கன்ஃபர்மேஷன் மெசேஜ் தொலை தொடர்பு சேவை நிறுவனத்திடம் இருந்து வந்த பின் யூஎம்டிஎஸ் மோட் வசதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
ஏர்செல்:
நிறைய வாடிக்கையாளர்கள் ஏர்செல் தொலை தொடர்பு சேவையினை பயன்படுத்தி வருகின்றனர். கிராம பகுதிகளில் கூட இந்த தொலை தொடர்பு சேவையை பயன்படுத்துபவர்கள் அதிகம். ஸ்டார்ட் 3ஜி (START 3G) என்று டைப் செய்து பின் 121 என்ற எண்ணிற்கு மேசேஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு உறுதி செய்து கொள்ள ஒரு மெசேஜ் அனுப்பப்படும். பின்னர் 3ஜி சேவையை பெற உங்கள் மொபைலில் யூஎம்டிஎஸ் மோட் செலக்ட் செய்ய வேண்டும்.
பிஎஸ்என்எல்:
பிஎஸ்என்எல் தொலை தொடர்பு சேவையில் 3ஜி நெட்வொர்க் வசதி பெற, எம்3ஜி (M3G)என டைப் செய்ய வேண்டும். பின் 53733 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். கன்ஃபர்மேஷன் மசேஜிற்காக காத்திருங்கள். அதன் பின் மறக்காமல் யூஎம்டிஎஸ் மோட் ஆப்ஷனை சொடுக்க வேண்டும். இப்படி 3ஜி சேவையை எளிதாக பயன்படுத்தலாம்.
ரிலையன்ஸ்:
ரிலையன்ஸ் தொலை தொடர்பு சேவையில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
(டோல் ஃப்ரீ) எண்ணிற்கு கால் செய்ய வேண்டும். அதன் பின்னர் யூஎம்டிஎஸ் மோட் செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
0 comments: