12 Sept 2012

கூகுளின் பரிணாம வளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் அரிய படங்கள்


இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் முக்கால் வாசி பேர் முதலில் செல்லும் தளம் GOOGLEதான்.தேடுபொறிகளில் தலைவனாக வலம் வரும் இந்த GOOGLE கடந்து வந்த பரிணாம வளர்ச்சியை இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கூகுள் 1996 ஆம் ஆண்டு தான் பிறந்தது,கூகுளுக்கு முன்பே இணையப் பக்கங்களை தேடுவதறகு சில தேடுபொறிகள்(search engines) புலக்கத்தில் இருந்தன,ஆனால் கூகுள் தனது அசாத்திய வளர்ச்சியின் மூலம் அவைகளைவிட பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

1996 ஜனவரி மாதம் California மாகானத்தில் உள்ளSTANFORD பல்கலை கழகத்தில் Phd((டாக்டர் பட்டம் பெறுவதற்கான படிப்புமாண்வர்களான லேரி பேஜ் மற்றும்  செர்ஜி ப்ரின் (larry page & sergy brinஆகியோரால் ஆய்வு முடிவாக (Research Project) கூகுள் ஆரம்பிக்கப் பட்டது.

1997
கூகுள் இணையதளம் முதன் முதலில் தனது பணியை துவங்கியது,கூகுளின் முதல் இணைய பக்கம்www.google.stanford.edu  என்ற முகவரியில் தங்கியிருந்தது.கூகுள் இணைய தளத்தின் முதல் லோகோ(logo) வை Sergy brin வடிவமைத்தார்.கூகுள் அப்போதைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த  Yahoo வில் இருப்பது மாதிரியே தன்logo விலும் ஒரு ஆச்சரியக்குறியை சேர்த்துக் கொண்டிருந்தது.





1998
Stanford search பட்டன் Subscribe box  போன்றவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.அதன் வடிவமைப்பில் மட்டும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது.இந்த முறை கூகுள் தன் பெயருடமன்  BETA என்கிற பெயரையும் தாங்கி வலம் வந்தது.(Beta  என்றால் சோதனை முயற்சியில் விடப்ப்பட்டதென அர்த்தம்,பயனாளர்களின் ஆலோசனையின் பேரில் மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த பதிப்பை வெளியிடுவார்கள் ).



1999
தேவையில்லாத விசயங்களை தன் இணையப் பக்கத்தில் குவிக்காமல்
தெளிவான பக்கத்துடன் வெளிவந்தது. Stanford search buttonமற்றும் Subscribe button  போன்றவைகள் ஏதுமின்றி தனது தேடுதல் பணியில் களமிறங்கியது.


2000
சிறந்த தேடுபொறி என கௌரவ படுத்தபட்டது,பின் தன்னுடன் இணைத்து வைத்திருந்த Beta என்ற பெயரை தன்னிடமிருந்து அகற்றிக்கொண்டது."About Google",Jobs@google போன்ற புதிய லின்க் களை தன்னுடன் இணைத்துக்கொண்டது.


2001
  செப்டம்பர் 11 ல் அமெரிக்காவில் ஏற்பட்ட விமான தாக்குதல் கூகுளில் சில மாற்றங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது,கூகுள் செய்திகள் மற்றும் கூகுள் support ஆகிய சேவைகள் புதிதாக கூகுள் உடன் இணைக்கப்பட்டன.
இணைய பக்கங்களை தேடுவதுடன் நிறுத்திக் கொளளாமல் சிறப்பான இதர சேவைகளையும் செய்ய வெண்டும் என்ற முயற்சியில் கூகுள் இறங்கியது.


2002
Search box க்கு மேற்புறம் புதிய பட்டைகளுடன் (Tabs) புதிய பொலிவுடன் கூகுள் வலம் வரத் துவங்கியிருந்தது,Dooddle என்று அழைக்கப்படும் புதுப்புது Google Logo உடன்வெளிவரத் துவங்கியது,Google ன்முதல் Doodle  லேரி பேஜ்&செர்ஜி ப்ரின் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.



2003
கூகுள் காதலர் தினத்தை தனது ரசிகர்களுடன் புதியDoodle உடன் கொண்டாடியது,இதன் பிறகு கூகுள் முக்கிய நிகழ்வுகள்,முக்கியமான விடுமுறை தினங்கள் போன்றவற்றிற்கு புதிய Doodles களை அறிமுக படுத்த துவங்கியது.


2004
Doodles மக்களிடையே பிரபலமடைய துவங்கியிருந்தது,2004 ஆம் ஆண்டு தான் GMAIL அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் சில பட்டைகள்(Tabs)சேர்க்கப்பட்டன மற்றும் சில TAB கள் மாற்றம் செய்யப்பட்டன.2004 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் கொண்டாட்டத் திற்கான Doodles உடன் கூகுள் பக்கம்


 2005
பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை கூகுளில் Google "Local" என்ற புதிய TAB இணைக்கப் பட்டது.

2006
கூகுள் தளத்தின் வலது மேற்புறத்தில் வியத்தகு விதத்தில் வடிவமைக்கப்பட்ட லின்க் கள் கொண்ட பகுதி அறிமுகப்படுத்தப் பட்டது.இது கூகுள் சேவைகள்,மற்றும் கூகுள் கண்க்குகள்(google services& accounts)போன்றவைகளில் பயனர்கள்(users) Log in ஆக ஏதுவாக அமைக்கப்ப்ட்டதுமேலும் இது பயனுள்ளதாகவும் இருந்தது.

2007
கூகுள் 11 வயது குழந்தையாக இந்த வருடத்திற்கான தனது சேவையை ஆரம்பித்தது.Tab கள் தேடு பெட்டியின் மேலே இருந்து Screenன் ன் மேல் இடது மூலைக்கு பதவி உயர்வு பெற்றது.IGOOGLE அறிமுகப் படுத்தப்பட்டது.


2009
2009 ல் இருவேரு அவதாரங்களை கூகுள் எடுத்தது முதல் முறை கூகுள் SEARCH BOX மற்றும் பட்டன்கள் பெரிது படுத்தப்பட்டன கூகுள் Search, I'M Feeling Lucky ஆகிய பட்டன் களுக்கு இடையேயான இடைவெளி சற்று அதிகப்படுத்தப்பட்டது.
2009 ன் இரண்டாவது அவதாரம்:
கூகுள் லொகோ மற்றும் SEARCH பட்டன்கள் மட்டும் காட்டப்பட்டன மற்ற லின்க் கள் அனைத்தும் மங்களாக(Fade out) காட்டப்பட்டன,அந்த லின்க் களின் அருகே மவுஸ் கர்சரை கொண்டு செல்லும் போது மட்டும் அந்த லின்க் கள் தெளிவாக காட்டப்படும் படியாக வடிவமைக்கப்ப்ட்டிருந்தது.

2009 ன் முதல் அவதாரம்:



 2009 ன் இரண்டாம் அவதாரம்:



2010

கூகுள் லோகோ வின் பொழிவு கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டதுகூகுள் தேடுபொறியின் வெள்ளை பக்கம் நமக்கு பிடிக்க வில்லை என்றால் அதன் பின்புலத்தை(Back ground) மாற்றும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டது.
  


2011
கூகுளின் தற்போதைய நிலை


ஒரு சின்ன புள்ளி விவரத்தோட இந்த பதிவை முடிக்கிறேன்...


2006 ல்


2008 ல்
கூகுளின் வளர்ச்சி 


கூகுளுக்கு இப்ப 14 வயசு ஆகுது,இந்த சின்ன வயசுல அது அடைந்திருக்கும் வளர்ச்சி கொஞ்சம் அதிகம் தான் அது இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துவோம்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்