தொடர்ச்சியான கணனிப் பாவனையின் காரணமாக வன்றட்டில் பயனற்ற கோப்புக்களும், தற்காலிகமான கோப்புக்களும் அதிகளவில் தங்குகின்றன.
இதனால் வன்றட்டில் அநாவசியமான முறையில் மேலதிக இடம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் வேகம் குறைவடைவதனால் ஒட்டுமொத்தமாக கணனியின் செயற்திறனும் குறைவடைகின்றது.
எனவே இவ்வாறு அநாவசியமாகக் காணப்படும் பயனற்ற, தற்காலிக கோப்புக்களை சிறந்த முறையில் தேடி அவற்றை நீக்குவதற்கான வசதியை Wise Disk Cleaner எனும் மென்பொருள் தருகின்றது.
இம்மென்பொருளானது அனைத்துவகையான தற்காலிக, பயனற்ற கோப்புக்கள் இருக்கும் இடங்களை விரைவாக தேடுவதுடன் அவற்றினை பாதுகாப்பான முறையில் நீக்குகின்றது.
இதனால் வன்றட்டில் மேலதிக இடம் அதிகரிக்கப்பட்டு அதன் செயற்படுவேகம் அதிகரித்து கணினியின் வினைத்திறனும் அதிகரிக்கின்றது.
எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.
0 comments: