
மேலே உள்ள படத்தில் நடுவில் இருக்கும் சிவப்பு புள்ளியை முப்பது நொடிகள்
பாருங்கள். அதன் பின் அதற்கு கீழே இருக்கும் வெள்ளை பகுதியை பாருங்கள். அந்த நெகடிவ் படத்தின் உண்மையான படம் தெரிகின்றதா?
இதுவும் ஒரு வகையான மாயத் தோற்றம் (Illusion) ஆகும். இது போல படங்களை இணையதளங்களில் பார்த்திருப்பீர்கள். இதனை நாமே செய்வது எப்படி? கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
1. MS Paint-ஐ கணினியில் திறந்துக் கொள்ளுங்கள்.
2. அதில் மாற்றப் போகும் படத்தை திறந்துக் கொள்ளுங்கள்.
3. Select All செய்துக் கொள்ளுங்கள். ("Cntrl + A" அழுத்தியும் செய்துக் கொள்ளலாம்)
4. படத்தின் மீது Right Click செய்யுங்கள்.
5. "Invert Colour" என்பதை கிளிக் செய்யுங்கள்.
6. படத்தில் இருக்கும் உருவத்தின் மூக்கில் சிவப்பு கலரிலோ அல்லது பளிச்சென்று தெரியும்விதமாக வேறு நிறத்திலோ புள்ளி ஒன்றை வரைந்துக் கொள்ளுங்கள்.
7. பிறகு Save செய்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான்! உங்களுக்கு மாயப் படம் தயாராகிவிடும். நண்பர்களுடன் அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
0 comments: