12 Sept 2012

ஒரே சமயத்தில் 3பேருடன் மொபைலில் பேச: குட்டி டிப்ஸ்



ஒரே சமயத்தில் 3க்கும் மேற்பட்டவர்களுடன் ஒன்றாக மொபைலில் பேசும் வசதி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த வசதியினை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி கொஞ்சம் விவரமாக பார்க்கலாம். இந்த வசதி லேண்டுலைன், ஐபோன் மற்றும் மொபைல்களில் வேறு விதமான வழிமுறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மொபைலில் ஒரே சமயத்தில் 2க்கும் அதிகமானோருடன் பேசுவது பற்றி பார்க்கலாம்.
முதலில் ஒருவருக்கு கால் செய்து கொள்ளவும் 

 பின்னர் option button கிளிக் செய்து அவரது போன்காலை ஹோல்டு ஆப்ஷனில் வைத்துவிட வேண்டும். 


அதன் பின் மெனு ஆப்ஷனில், கான்டேக்டு/new call  option னுக்கு  செல்ல வேண்டும்.

இதில் யாருடன் அடுத்து பேச வேண்டுமோ அவரது மொபைல் எண்ணிற்கு டையல் செய்யது  call button அழுத்த வேண்டும் 

இரண்டாவது நபர் இணைப்பில் வந்தவுடன் CONFERENCE CALL/மெர்ஜ்/ஜாயின்/கம்பைன் கால்ஸ் அல்லது கால்/டாக் இப்படி எந்த வார்த்தையில் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறதோ அதை க்ளிக் செய்து இரண்டாவதாக கால் செய்யப்பட்ட நபரது போன்காலை இணைத்து கொள்ள வேண்டும்.

இது போல் 2வது நபருக்கு செய்யப்பட்ட போன்கால் மட்டும் அல்லாமல், இரண்டுக்கும் மேற்பட்டவர்களது போன்காளையும் டையல் செய்து இணைக்கலாம். இந்த வசதி நிச்சயம் அனைவரும் எளிதாக பயன்படுத்த கூடிய வகையில் தான் இருக்கும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்