குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இணைய உலவி தான் Kidzui. இதைப் பயன்படுத்தினால் பெற்றோருக்கு குழந்தைகள் மீதான பயம் போய்விடும். இணைய உலகத்தில் குழந்தைகள் நுழைய சரியான உலவியாக இருக்கிறது இந்த உலவி. இதை உருவாக்கியவர்கள் பல மில்லியன் தளங்கள், வீடியோப் படங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை இணைத்திருக்கிறார்கள். அதுவும் நிர்வாகிகளால் பலமுறை சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பானவை என்றபின்னரே இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இதில் குழந்தைகள் பாதுகாப்பான யூடியுப் வீடியோக்களை மட்டுமே காண முடியும். மேலும் ஏராளமான விளையாட்டுகளை இணைத்திருப்பது குழந்தைகளை மகிழ்ச்சியடையச் செய்யும். மேலும் குழந்தைகள் எதை எதைப் பார்த்தார்கள் சென்றார்கள் என்பதைப் பற்றிய வாரந்திர அறிக்கையும் நமக்குக் கிடைக்கும்.


தரவிறக்கச்சுட்டி: http://www.kidzui.com/download/
0 comments: