12 Dec 2011

MICROSOFT SECURITY ESSENTIAL: கணணிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்!

எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இணையத்தில் உலவும்போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ, அல்லது USB டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் கணணியில் புகுந்து கணணியில் வைத்திருக்கும் முக்கியமான தகவல்களை அழிப்பதுடன் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.
வைரஸ்களில் இருந்து கணணிகளை பாதுகாக்க பல ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்கள் உள்ளது. இந்த வரிசையில் பிரபல கணணி நிறுவனமான மைக்ரோசாப்ட் புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. Microsoft Security Essential என்ற மென்பொருள் இப்பொழுது புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
இந்த மென்பொருள் முழுக்க முழுக்க இலவச மென்பொருளாகும்.
கணணியில் உள்ள வைரஸ்கள். மால்வேர்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கிறது.
கணணியை ஸ்கேன் செய்ய மூன்று வகையான வசதிகளை(Quick Scan, Full Scan, Custom Scan) கொண்டுள்ளது.
இணையத்தில் உலவும் பொழுதும் நம் கணணியை எந்த வைரசும் பாதிக்காதவாறு Real Time Protecting வசதியை கொண்டுள்ளது.
மென்பொருளை உபயோகிக்க கணணியின் அடிப்படை தேவைகள்:
விண்டோஸ் இயங்கு தளத்தின் ஒரிஜினல் பதிப்பை உபயோகிப்பது அவசியம்.
Windows XP(SP3), Vista, Windows 7 போன்ற கணினிகளில் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
கணணி VGA Display 800 X 600 க்கு அதிகமாக இருக்க வேண்டும்.
200GB கணணியில் இடம் இருக்க வேண்டும்.
மென்பொருளை நிறுவும் பொழுது கணணியில் இணைய வசதி இருப்பது அவசியம். நண்பா எடுத்துக்கோ இதோ உனக்காக DOWNLOAD

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்