1 Dec 2011

Web Camera வை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு இதோ ஓர் ஐடியா!

இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம்.

புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும் தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கமெராவை கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம்,
ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கமெராவில் ஏதாவது மாற்றம்(detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும்.
அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும், நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்