பொதுவாக கணனியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களை சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம் மேலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் கிளவுட் ஸ்ட்டோரேஜ் வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இச் சேவையை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் உள்ளதுடன் அவற்றில் சில கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கவும் செய்கின்றன.
சில தளங்கள் இலவசமாக சேவையை வழங்குகின்ற போதிலும் அவை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே. எனினும் இவ் வசதியை இலகுவாக பெற ஒரு தளம் உள்ளது.
அத்தளத்தின் பெயர் www.cx.com
இத்தளத்தின் மூலம் பதிவேற்றவும், பதிவேற்றியதை தரவிறக்கவும் 10 GB இடத்தை இலவசமாக அளிக்கிறது ஒரு இத்தளம். எந்த இயங்குதளத்தினையும் விண்டோஸ், மெக், அண்ட்ரோய்ட் மற்றும் பிளக்பெரி போன்றவற்றைக் கொண்டியங்கும் அனைத்து உபகரணங்களில் இருந்தும் இணையத்தின் ஊடாக எமது தகவல்களை பாதுகாப்பாக ஒன்லைனில் சேமிக்கலாம். மேலும் இத்தளம் நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தும் சேவையை நமக்கு அளிக்கின்றது.
இத்தளத்திற்கு சென்று ஒரு பயனாளர் கணக்கினை உருவாக்கி நீங்களும் உங்கள் முக்கியமான தகவல்களை கிளவுட் சேமிப்பு முறையில் பாதுகாப்பாக சேமிக்கலாம்.
மேலும் பல வசதிகளை கொண்ட இத்தளத்திற்கு சென்று அவ்வசதியை உபயோகித்து பார்க்கலாமே.
0 comments: