இப்பதிவு புதியவர் மற்றும் சிறுவர்களுக்காக..
கணினியில் எத்தனையோ வேடிக்கைகள் நம்மால் காட்ட முடியும். அதில் ஒன்றுதான் நமது கணினித் திரையை வேண்டிய திசைகளில் மாற்றி வைப்பது. நமது டெஸ்க்டாப்பில்(Desktop) ஸ்கிரீன் சேவர் வைத்திருப்போம்.. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கணியில் வேலைசெய்யவில்லை எனில் கணினித் திரையை காப்பதற்காக screen saver உபயோகித்திருப்போம்...அதில் எறும்புகள் ஊறுவது போலவும், கரையான்கள் டெஸ்டாப்பில் ஊர்ந்து அதை அரிப்பது போலவும் காட்டக்கூடிய ஸ்கிரீன் சேவர்கள் இருக்கின்றன(இது பழசு). இப்போது அதிக நவீனப்படுத்தப்பட்ட ஸ்கீரின் சேவர்கள் வந்துவிட்டன.
இப்பபதிவு ஸ்கிரீன் சேவர்(Screen saver) பற்றி அல்ல. நமது கணினித் திரையை நாலாபக்கமும் நாம் திருப்பி வைக்கலாம். இது ஒரு வேடிக்கை விளையாட்டு. இளம் சிறுவர்களுக்கு இது பிடிக்கும். அதாவது நமது ஸ்கீரின் தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும்? இடது பக்கம் திருப்பினால் எப்படி இருக்கும்? என்பதை நாம் மாற்றிப் பார்க்கலாம். நான்கு திசைகளிலும் இப்படி மாற்றி செய்து பார்க்கலாம். இதுவும் மிகவும் எளிதுதான்.
Alt+Ctrl அழுத்தியவாறே ஏரோ மார்க் கீயை கீழ்நோக்கிய (Arrow mark Key) (அம்புக்குறி பட்டனை) அழுத்துங்கள். கீழ் நோக்கி அழுத்தினால் தலைகீழாகவும், இடப்புறம் நோக்கி அழுத்தினால் இடப்புறமாகவும், வலது பக்கமாக உள்ள arrow mark Key அழுத்தினால் வலப்புறமாக திரும்பும்.
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மேல்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
வேண்டிய திசைக்கு மாற்ற ஷார்ட் கட் கீகள்(Short Cut Keys)
- Alt+Ctrl+கீழ் நோக்கிய அம்புக்குறி (Down Aro key)(தலைகீழாய் திருப்ப)
- Alt+Ctrl+இடம் நோக்கிய அம்புக்குறி (Down Aro key)
- Alt+Ctrl+வலம் நோக்கிய அம்புக்குறி (Down Aro key)- வலது பக்கம் திருப்ப
- Alt+Ctrl+மேல் நோக்கிய அம்புக்குறி (Down Aro key)- பழைய நிலைக்கு திருப்ப
0 comments: