தினமும் ஒரு சாதனை எலக்ட்ரிக்கல் துறையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் எலக்ட்ரிக்கல் துறையில் பல புதிய சாதனைகள் ஊக்குவிப்பதற்கு வசதியாக எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டு ஓன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Try it Free No Registration Required என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் New datasheets என்பதில் ஏற்கனவே இருக்கும் மொடலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உள்நுழையலாம் அல்லதுபிளிஸ் கிளிக் இந்த பக்கத்தை சொடுக்கி நேரடியாக புதிதாக நாமாக ஒரு சர்க்யூட் உருவாக்கலாம்.
எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கருவிகளும் இங்கு கிடைக்கிறது. ஒவ்வொரு கருவிக்கும் எந்த வகையான அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி எதை எதனுடன் சேர்க்க வேண்டும் என்பது வரை அத்தனையும் நாமே உருவாக்கலாம்.
எல்லாம் உருவாக்கி முடித்தபின் நாம் உருவாக்கிய சர்க்யூட் Diagram -ஐ JPG, PNG, GIF, or SVG கோப்புகளாக மாற்றலாம்.
0 comments: