2 Dec 2011

Back Up செய்ய வேண்டிய அவசியமான File கள்

கணணி பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள தகவலினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பக்அப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கணணி என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான்.
இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான கோப்புகளை பக்அப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கியமான கோப்புகள் எவை என்று தெரிவதில்லை.


எந்தெந்த கோப்புகளை எல்லாம் பக்அப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா கோப்புகளையும்(வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் கோப்புகள்)பக்அப் எடுக்க வேண்டும்.
எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 கோப்புகள், வீடியோ கோப்புகள் என இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்த எல்லா கோப்புகளையும் பக்அப் எடுக்க வேண்டும்.
மின்னஞ்சல்கள், மின்னஞ்சல்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இணையச் சேவைகள் தொடர்பானவற்றையும் பக்அப் எடுக்க வேண்டும்.
உங்களது கோப்புகள்: எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற கோப்புகள் My Documents என்ற கோப்பறையில் தான் கணணி சேமிக்கும். எனவே இந்த கோப்பறையை பக்அப் எடுக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பி கணணியில் படங்களை My Pictures கோப்பறையிலும், ஓடியோ கோப்புகளை My Music கோப்பறையிலும், வீடியோ கோப்புகளை My Video கோப்பறையிலும் போட்டு வைக்கும். இந்த கோப்பறைகள் எல்லாமே My Documents கோப்பறையின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents கோப்பறையை பக்அப் எடுத்தால் இவையும் தாமாகவே பக்அப் ஆகிவிடும்.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் செட்டிங்: மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பக்அப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது.
ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.
எழுத்து வகைகள்: பல அப்ளிகேஷன்களை உங்கள் கணணியில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கணணியில் நிறுவி இருக்கும். இணையத்தில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கணணிக்கு தரவிறக்கம் டவுன்லோடு செய்திருப்பீர்கள்.

C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள கோப்பறையில் தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பக்அப் எடுங்கள்.
இணைய விவரங்கள்: இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.
பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பக்அப் எடுக்க வேண்டும்.
எப்படி பக்அப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.
உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களை நீங்கள் பக்அப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் மின்னஞ்சல் கணக்கு பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பக்அப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பக்அப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.
விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற கோப்புகள் கணணியில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பக்அப் எடுப்பது நல்லது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்