1 Feb 2012

ரிம் வழங்கும் அதிவேகம் கொண்ட புதிய பிளாக்பெர்ரி டேப்லெட்!


எல்டிஇ நெட்வொர்க் வந்த பின்பு நிறைய நிறுவனங்கள் தங்களது டிவைஸ்களில் இந்த எல்டிஇ நெட்வொர் சப்போர்ட்டை வழங்குகின்றனர். இந்த எல்டிஇ சப்போர்ட் கொண்ட பல டிவைஸ்கள் இதுவரை பல வந்திருக்கின்றன. அதுபோல் டேப்லெட் துறையும் இந்த தொழில் நுட்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில் இப்போது ரிசர்ச் இன் மோஷன் (ஆர்ஐஎம்) நிறுவனம் எல்டிஇ சப்போர்ட் கொண்ட தனது புதிய பிளாக்பெர்ரி டேப்லெட்டை அறிவித்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட் பிளாக்பெர்ரியின் ப்ளேபுக் வரிசையில் வரும் டேப்லெட் ஆகும்.
இந்த புதிய ப்ளேபுக் டேப்லெட் இன்னும் சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று ஆர்ஐஎம்மின் தலைமை இயக்குனர் தோர்ஸ்டர்ன் ஹெய்ன்ஸ் கூறுகிறார். மேலும் இந்த டேப்லெட் தாறுமாறான வேகம் கொண்ட இணைப்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறுகின்றார். கடந்த வருடமே வெளிவர வேண்டிய இந்த புதிய டேப்லெட் சில தொழில் நுட்பம் காரணமாக இந்த வருடம் வரவிருக்கிறது என்று கூறுகிறார்.
இந்த புதிய டேப்லெட்டைப் பற்றி இணையதளங்கள் அளிக்கும் தகவல்களிலிருந்து பார்த்தால் இந்த டேப்லெட் 1.5 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் அதே நேரத்தில் 1 ஜிபி ரேமையும் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த புதிய ப்ளேபுக் ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதன் விலை மட்டும் சற்று குறைவாக இருந்தால் கண்டிப்பாக இது வெற்றிப் பவனி வரும் என்று அடித்துச் சொல்லலாம். மேலும் ஆர்ஐஎம் 3ஜி டிவைசை வழங்கிய பின் 2013ல் 4ஜி சப்போர்ட்டுள்ள புதிய டிவைசையும் வழங்க இருக்கிறது என்று இணைய தளங்கள் கூறுகின்றன
.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்