24 Feb 2012

கடைசியாக பயன்படுத்திய வேர்ட் கோப்பு திறப்பதற்கு..

வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும் ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில் இறுதியாகத் திறந்து பயன்படுத்திய கோப்பைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம்.



File Menu சென்று பட்டியலைத் திறந்தால் அதில் முதலாவதாகக் கிடைக்கும் கோப்பு அதுவாகத்தான் இருக்கும் அல்லது My Recent Documents கோப்பு பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் பயன்படுத்திய  கோப்பைப் பெற்று கிளிக் செய்து பின்னர் இயக்கலாம்.
இந்த கிளிக்குகளை மிச்சம் செய்திடும் வகையில், ஒரு செட்டிங்ஸ் அமைத்தால் வேர்ட் புரோகிராம் திறக்கும் போதே இறுதியாக நாம் பயன்படுத்திய கோப்புடன் வேர்ட் இயங்கத் தொடங்கும். கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும்.
1. Start-> Run-ஐ தெரிவு செய்யவும்.
2. இதை winword.exe /m(FileName) டைப் செய்யவும். Ex.winword.exe/mfile
3. அதன் பின் ஓகே கிளிக் செய்திடவும்.
இதனையடுத்து,
1. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் winword.exe என்ற கோப்பைக் கண்டறியவும். இது வழக்கமாக C:Program FilesMicrosoft OfficeOfficefolder என்ற இடத்தில் கிடைக்கும். இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Create Shortcut என்பதைத் தெரிவு செய்யவும்.
விண்டோஸ் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கும். இது பட்டியலின் இறுதியாகக் காட்டப்படும். பின்னர், புதிய ஷார்ட்கட்டில் ரைட் கிளிக் செய்து Send To Desktop என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி டெஸ்க்டாப்பில் புதிய ஷார்ட்கட் ஐகானைக் கண்டறியவும்.
3. இதில் ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும்.
4. ஷார்ட்கட் டேப்பில், /m(File Name) என்ற ஸ்விட்சை ஸ்ட்ரிங்குடன் இணைக்கவும்.
5. ஓகே கிளிக் செய்திடவும்.
இந்த ஷார்ட்கட்டைப் பயன்படுத்தி எப்போதெல்லாம், வேர்ட் திறக்கப்படுகிறதோ இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட கோப்புடனேயே வேர்ட் திறக்கப்படும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

 

ஒரு like பண்ணுங்க

பயனுள்ள இனையதளங்கள்